தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
80 வயதைத் தொட்டார் போப் ஆண்டவர்

வாட்டிகன் சிட்டி:

போப் ஆண்டவர் போப் ஜான் பாலுக்கு இன்றுடன் வயது 80 ஆகிறது. இவர் உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க மக்களுக்காக 21 ஆண்டுகள்சேவை புரிந்தவர்.

பொதுவாய் போப் ஆண்டவர் தன்னுடைய பிறந்தநாளுக்காக எந்தவித ஆர்ப்பாட்டமும் செய்வதில்லை. மிக மிக எளிதாகக் கொண்டாடுவார். ஆனால் இந்தமுறை மிகவும் வித்தியாசமாய்க் கொண்டாடத் திட்டமிட்டுள்ளார்.

இந்த முறை வாடிகன் சிட்டியில் உள்ள சர்ச் ஒன்றில் 250 பிஷப்புகள், 3000 பாதிரியார்கள் முன்னிலையில் சிறப்புப் பிரார்த்தனையுடன் கொண்டாடுகிறார்.

அதே சர்ச்சில் இன்று மாலை லண்டனைச் சேர்ந்த சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா கலைக்குழுவினரின் இசைநிகழ்ச்சியும் இவரது பிறந்தநாளை முன்னிட்டுநடைபெறுகிறது.

பின்னர் வெள்ளிக்கிழமை காலை போப் ஆண்டவர் 173 நாடுகளிலிருந்து வந்துள்ள தூதர்கள் முன்னிலையில் உரையாற்றுவார்.

போப்ஆண்டவர் இதுவரை உலகத்திலேயே அதிக அளவு தலைவர்களைச் சந்தித்திருக்கிறார். பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். இந்த2000 மாவது ஆண்டு புனித ஆண்டு என்று போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+