தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
காவிரி பிரச்சனை கூட்டம்: டெல்லி சென்றார் கருணாநிதி

சென்னை:

காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்க முதல்வர் கருணாநிதி டெல்லி சென்றார்.

தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக விவாதிப்பதற்காக டெல்லியில்பிரதமர் வாஜ்பாய் தலைமையில் காவிரி நதி ஆணையக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடக்கிறது.

சென்னையிலிருந்து மாலை 5.15 மணிக்கு கருணாநிதி டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

இந்த கூட்டத்தில் காவிரிப் பிரச்னையை விட, பெரிதான கேரளத்துடனான முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை பற்றி விரிவாக விவாதிப்பேன் என்றுமுதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

தமிழகம் - கர்நாடகா இடையிலான காவிரி நதி நீர் பிரச்னையில் பிரதமர் தலைமையில் காவிரி நதி ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையக் கூட்டம்டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில் நான்கு மாநில முதல்வர்களும் கலந்து கொள்கின்றனர்.

இதுபற்றி வியாழக்கிழமை நடைபெற்ற சட்டசபை விவாதத்தில் பேசிய தேசிய லீக் தலைவர் அப்துல் லத்தீப் குறிப்பிட்டார். அவர் பேசுகையில், ""காவிரிஇல்லாமல் இலக்கியம் இல்லை. எனவே காவிர் பிரச்சனை பற்றி பிரதமருடன் பேசப் போகும் முதல்வர், நிரந்தர தீர்வு காண்பார் என்றுஎதிர்பார்க்கிறோம் என்றார்.

அப்போது முதல்வர் கருணாநிதி குறுக்கிட்டு பதிலளித்தார். முதல்வர் கூறுகையில், ""காவிரி பிரச்சனை ஒன்றும் பூதாகரமானதாக இல்லை. அதற்கானபிரச்னைகளை தீர்த்துக் கொள்ள பிரதமர் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விட்டது. அதில் இருப்பது சின்ன சின்ன பிரச்னைகள் தான். அதைதீர்த்துக் கொள்ளலாம்.

ஆனால், அதை விட முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை தான் பெரியதாக இருக்கிறது. இந்த பிரச்சனை பற்றி தான் விரிவாக பேசுவோம்என்றார் முதல்வர்.

தமிழகம் - கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்என்று தமிழகம் வலியுறுத்தி வருகிறது. அதற்கு கேரளா மறுத்து வருகிறது. இதுபற்றி இரு மாநில முதல்வர்களும் பல முறை பேசியும் தீர்வுகாணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+