-

Subscribe to Oneindia Tamil

கிங்ஸ்டன்:

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கிங்ஸ்டனில் நடைபெற்று வரும் இரண்டாவதுகிரிக்கெட் டெஸ்டில், பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 253 ரன்களுக்குஆட்டமிழந்தது. யூசுப் யுகானா சிறப்பாக ஆடி சதமடித்தார்.

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. நசீர் மற்றம் வாஸிமும் துவக்கஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் அணியின்வேகப்பந்து வீச்சாளர்கள் வால்ஷ், ஆம்புரோஸ் இருவரது சிறப்பான பந்துவீச்சால்ரன்குவிக்க பாகிஸ்தான வீரர்கள் திணறினர்.

பயத்துடன் விளையாடியதால் பாகிஸ்தான் வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஒருகட்டத்தில் 39 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தவித்தது. அந்தநேரத்தில் யூசுப் யுகானாவும், கேப்டன் மோயின் கானும் ஜோடி சேர்ந்தனர். இருவரும்பொறுமையாக ஆடி ரன்கள குவித்தனர். இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 71 ரன்கள்எடுத்தனர்.

அணியின் எண்ணிக்கை 110 ஆக இருந்தபோது மோயின்கான் அவுட்டானார். அடுத்துவந்த வாஸிம் அக்ரம், யுகானாவுடன் ஜோடி சேர்ந்தார். அவரும் நின்று ஆடினார்.அவரும், யுகானாவும் 7-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் குவித்தனர். இதற்கிடையேயுகானா தனது சதத்தை நிறைவு செய்தார். அவர்115 ரன்கள் எடுத்தார். அவருக்குஅடுத்தபடியாக மோயின் கான் 38 ரன்களும், வாஸிம் அக்ரம் 42 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 86 ஓவர்களில் 253 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியில் வால்ஷ் சிறப்பாகப்பந்து வீசி 22 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆம்புரோஸ் 53 ரன்களுக்கு2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் துவக்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல்நாள்ஆட்ட முடிவில் 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்திருந்தது.கேம்ப்பெல் 2 ரன்களுடனும், கிரிஃபித் ரன் எடுக்காத நிலையிலும் களத்தில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+