தமிழகத்தில் இன்று
சென்னை:
இலங்க்ைகு ராணவ தளவாடங்களை விற்கலாம். ஆனால், ராணுவத்தை அனுப்பக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர்ஆர்.உமாநாத் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் தமிழர் நலனுக்காக போராடும்அமைப்பல்ல. அது ஒரு தீவிரவாத இயக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைப் பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை குறித்துசென்னையில் உள்ள உமாநாத் அளித்த பேட்டி:
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து சி.பி.எம். கவலைகொள்கிறது. இலங்கை பிரச்சனைக்கு தனிஈழம் என்பது தீர்வாகாது. சிங்களஇனவெறியோ, தமிழ் இன வெறியோ பிரச்சனையைத் தீர்க்க உதவாது.
இலங்கைக்குள் ஈழத் தமிழ் மக்கள் சமத்துவமாக வாழும் அடிப்படையில் அமையும்சுயாட்சி அமைப்பே தீர்வாகும். இலங்கை பிரச்சனை வேறு, புலிகள் பிரச்சனை வேறு.தங்களது கருத்தை ஏற்காத தலைவர்களை கொலை செய்தது மூலமாக புலிகள்அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு என்பது நிரூபணமாகியுள்ளது.
இந்நிலையில் புலிகள் தலைமையில் தமிழ் ஈழம் என்பது இலங்கையின்ஒருமைப்பாட்டை சீர் குலைத்து, அதை அன்னிய ஏகாதிபத்திய சக்திகளின் ஒருகளமாக ஆக்கிவிடும். இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும்.
இப் பிரச்சனையில் இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பக் கூடாது. அதேநேரத்தில் இலங்கை அரசு கோரும் மற்ற அனைத்து உதவிகளையும் மத்திய அரசுஅனுதாபத்துடன் பரீசிலிக்கவேண்டும்.குறிப்பாக போரினால் அவதியுறும் இலங்கைத்தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அளிக்க வேண்டும்.
பா.ம.க.,ம.தி.மு.க., சிவசேனை உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தத்திற்குமத்திய அரசு பணியக் கூடாது. இப் பிரச்சனையில் மத்திய அரசு ஒரு வசதியானதெளிவான நிலை எடுக்க வேண்டும்.
பொறுப்பற்ற முறையில் சொந்த நலன் கருதி இலங்கைத் தமிழ் மக்கள் மற்றும்இந்தியாவின் நலன் சம்பந்தப்பட்ட இப் பிரச்சனையில் தமிழர்களின் ஒன்றுபட்டஜனநாயகக் குரல் நியாயமான அரசியல் தீர்வுக்காக ஓங்கி ஒலிக்க வேண்டும்.
காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டுநடவடிக்கைக்கு சி.பி.எம்தயாராக உள்ளது. எனினும் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில்தான் தெரியவரும்.இப்போதைக்கு அ.தி.மு.க.வுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
ஒரு மதச்சார்பற்ற, வகுப்புவாத கட்சியுடன் தேர்தல் நேரத்தில் சமரசம் செய்துகொண்டது என்பதற்காக, அந்த கட்சியும் வகுப்பு வாதக் கட்சி ஆகிவிடாது. இதுதி.மு.க.வுக்கும் பொருந்தும் என்-றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications