தமிழகத்தில் இன்று
புது தில்லி:
தென் இந்திய வான்வெளியில் போதுமான கண்காணிப்பு இல்லை என்று மத்திய பாதுகாப்புத் துறைக்கும், இந்தியவிமானப் படைக்கும் பாதுகாப்புத் துறையின் கண்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில் கண்டனம்தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை விவரம்:
தென் இந்தியப் பகுதிகளில் வான்வெளியில் ஏற்படும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க போதுமான கண்காணிப்பும்,பாதுகாப்பும் போதுமானதாக இல்லை. அப் பகுதிகளில் உள்ள விமானப் படை தளங்கள் முழுவீச்சில்செயல்படவில்லை.
1984-ம் ஆண்டு அமைக்கப்பட்ட தென் பிராந்திய விமானப் படை இதுவரை முழுவீச்சில் செயல்படத்துவங்கவில்லை. அந்த விமானப் படைக்குப் போதுமான உள் கட்டமைப்புகளும், விமான தளங்களும், நவீனஆயுதங்களும் இல்லாததுதான் இதற்குக் காரணம்.
தென் மாநிலங்களில் 9 தளங்களை அமைக்கும்படி தென் பிராந்திய விமானப் படைக்கு மத்திய அரசு அனுமதிஅளித்துள்ளது. ஆனால், கடந்த அக்டோபர் மாதம் வரை 3 தளங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. அதில்ஒன்றில் தக்க உள் கட்டமைப்பு வசதிகளும், விமானங்களைப் பராமரிக்கவும், பழதுபார்க்கவும் போதுமானஉபகரணங்களும் வசதிகளும் இல்லை.
அந்தமான்-நிக்கோபார் தீவுகள் பகுதியில் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் வேளையில், அகு ஒரே ஒரு தளம்மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகமும், விமானப் படையும் அதிக கவனம்செலுத்தாதது போல் உள்ளது.
பல்வேறு குறைபாடுகளுடன் விமான தளங்கள் அமைப்பதால் எந்தப் பலனும் இல்லை. அதிகரித்து வரும்அச்சுறுத்தல்களுக்கு ஏற்ற வகையில் விமானப் படையும், மத்திய பாதுகாப்புத் துறையும் உடனடியாகச் செயல்பட்டுதக்க நடவடிக்கை எடுக்கவேண்டியது மிகவும் அவசியம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.


Click it and Unblock the Notifications
