தமிழகத்தில் இன்று
சென்னை:
தமிழகம் முழுவதும் 4 கோடி ரூபாய் செலவில் 4 லட்சம் மரக் கன்றுகள் நட தமிழகவனத்துறை மற்றும் சுற்றுச் சூழல் துறை முடிவு செய்துள்ளது.
முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியில் இருந்து நவம்பர்மாதத்திற்குள் இவை நடப்படும் என்று இத் துறையின் செயலாளர் ராஜரத்தினம்தெரிவித்தார்.
நகர்ப் பகுதிகளில் மரம் வளர்த்து மாசு கட்டுப்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு மாநாடுசென்னை கோட்டையில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இம் மாநாட்டில்ராஜரத்தினம் பேசுகையில் , மத்திய மாநில அரசுகள் சேர்ந்து இந்த மரம் நடும்திட்டத்தை தமிழகத்தில் செயல் படுத்துகின்றன. முதல்வரின் பிறந்த நாள் பரிசாக இதுஅமையும்.மண்ணின் தன்மை, நிலத்தடி நீரின் தன்மை ஆகியவற்றை கணக்கிட்டுதான்மரக்கன்றுகள் நடப்படும்.
மொத்தம் 40 வகையான மரங்கள் நடப்படும். இதற்காக 125 நர்சரிகளில் செடிகள்வளர்க்கப்பட்டு வருகின்றன. முன்பு 3 அடி மரக்கன்றுகளை நட்டோம். இப்போது 6அடி மரக்கன்றுகளை நட உள்ளோம். எனவே, 6 மாதம் அவற்றை பராமரித்தால்போதும்.
இந்த மரக்கன்றுகள் நடுவதன் மூலம் காற்று மாசுபடுவதை தடுக்க முடியும். நகர்பகுதிகளில் மாசு அதிகம். காற்றில் 150 மைக்ரோகிராம் அளவுக்குத்தான் மாசு இருக்கவேண்டும்.ஆனால், சென்னை காற்றில் 300 மைக்ரோகிராம் மாசு கலந்துள்ளது.
கோயம்புத்தூரில் 391 மைக்ரோகிராம் மாசு கலந்த காற்று வீசுகிறது. தமிழ் நாட்டிலேயேஅதிகபட்சமாக தூத்துக்குடியில் 639 கிராம் மைக்ரோகிராம் மாசு கலந்த காற்று வீசுகிறதுஎன்றார்.
இம் மாநாட்டில் அமைச்சர் கோ.சி.மணி பேசுகையில், இது போன்ற நல்ல திட்டங்களைஅதிகாரிகள் உளப் பூர்வமாக செயல் படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வனத்துறையும் சுற்றுப் புறச்சூழல் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிபேசுகையில், ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல், திருப்பூர் பகுதிகளில்தொழிற்சாலைகள் அதிகம். மரங்கள் குறைவு. எனவே இப்பகுதியில் அதிகளவில்அதிகளவில் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications