தமிழகத்தில் இன்று
டெல்லி:
டெல்லியில் வெள்ளிக்கிழமை நடக்கவிருந்த காவிரி நதி நீர் பிரச்சனை குறித்த முதல்வர்கள் கூட்டத்தை கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாபுறக்கணித்ததையடுத்து அக்கூட்டம் மறுதேதியின்றி ஒத்திவைக்கப்பட்டது.
காவிரி நதி நீர் பிரச்சனை குறித்து விவாதிக்க தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநில முதல்வர்கள் கூட்டத்திற்கு பிரதமர்வாஜ்பாய் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்தக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடப்பதாக இருந்தது. இந்நிலையில் கர்நாடக முதல்வர் வியாழக்கிழமை பெங்களூரில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்கூட்டி இப்பிரச்சனை குறித்து அவர்களின் கருத்துக்களை கேட்டுக்கொண்டார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர் தான் டெல்லியில் நடக்கவுள்ள கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தார்.
காவிரி நதி நீர் ஆணையத்தின் இடைக்காலத் தீர்ப்புப்படி தமிழகத்துக்குக் கர்நாடகம் 205 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறந்து விட வேண்டும். ஆனால் கர்நாடகம்இதுவரை 267 டிஎம்சி தண்ணீரைத் திறந்து விட்டுள்ளது. இந்தப் பிரச்சனையில் கர்நாடகம் மத்திய அரசுடனோ, மாநில அரசுடனோ மோதல்போக்கைக் கடைபிடிக்க விரும்பவில்லை.
காவிரி நதிநீர்ப் பிரச்சனை குறித்து விவாதிக்க நான்கு மாநில முதல்வர்கள் கூட்டத்திற்கு பிரதமர் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் இப்பிரச்சனை குறித்துவிவாதிக்க எனக்கு போதிய கால அவகாசம் தருமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டேன். ஜூன் ஆறாம் தேதிக்குப் பின் இக்கூட்டத்தைக் கூட்டும்படி நான் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
ஆனால் அந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து நான் வெள்ளிக்கிழமை நடக்கவிருந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றார்.
முதல்வர்கள் கூட்டம் ஒத்திவைப்பு:
கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் புறக்கணிப்பால் வெள்ளிக்கிழமை நடப்பதாக இருந்த நான்கு மாநில முதல்வர்கள் கூட்டம் மறுதேதியின்றிஒத்திவைக்கப்பட்டதாக பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications