தமிழகத்தில் இன்று
பிஜியில் நிலைமை மோசமாகிறது: பிரதமரைக் கொல்--லப் போவ-தா-க புரட்சிக்காரர்கள் மிரட்டல்
சுவா:
| பசிபிக் பெருங்கடலில் உள்ள பிஜி நாட்டில் வெள்ளிக்கிழமை புரட்சி ஏற்பட்டதை அங்கு நிலைமைமோசமடைந்துள்ளது. புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி புரட்சிக்காரர்கள் தாங்கள் சிறைப்பிடித்துவைத்துள்ள பிரதமர் மகேந்திர செளத்ரியைக் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
ஆயுதம் ஏந்திய 7 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் நாடாளுமன்றத்தில் நுழைந்து ஆட்சியைப் பிடித்துக்கொண்டது. பிரதமர் மற்றும் 7 அமைச்சர்களை அக் கும்பல் சிறைப்பிடித்து வைத்துக்கொண்டது. புரட்சிக் கும்பல்தலைவர் ஜார்ஜ் ஸ்பைட் தன்னை இடைக்கால பிரதமராக அறிவித்துக் கொண்டுள்ளார். ரது ஜோப் செனிலோலிஎன்பவர் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். |
இந் நிலையில், புரட்சிக் கும்பல் தலைவர் ஸ்பைட் உடனடியாக சரணடையவேண்டும் என்று முன்னாள் பிஜிபிரதமர் சிடிவேனி ராபுகா கூறியுள்ளார். புரட்சிக்காரர்களுக்கு சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்றஅவர், பிஜியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை அடுத்த சில நாட்களில் முடிந்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தற்போது, இப் பிரச்சினையில் அரசுக்கும் புரட்சிக்காரர்களுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் பணியில் அவர்ஈடுபட்டுள்ளார். பிஜி போலீஸாரும், ராணுவத்தினரும் அரசுக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்று அவர்தெரிவித்தார். அரசுக்கு ஆதரவாக இருப்பதாக அறிவித்த ராணுவம், அதிபர் மாராவின் உத்தரவுக்கு மட்டுமேகட்டுப்படுவோம் என்று தெரிவித்ததுள்ளது.
பிஜியில் வெள்ளிக்கிழமை நடந்த புரட்சிக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிடித்து வைத்துள்ளபிரதமர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை உடனே விடுதலை செய்யும்படி புரட்சிக்காரர்களைஅமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
பிஜியில் அரசியல்சட்டத்துக்கு விரோதமாக ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தால், அமெரிக்காவுக்கும், பிஜிக்கும்இடையோன உறவு பாதிக்கும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications