தமிழகத்தில் இன்று
சென்னை:
எல்லா நதிகளையும் தேசியமயமாக்க வேண்டும் என்று டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தில்தமிழக முதல்வர் கருணாநிதி வலியுறுத்தினார்.
மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடைபெற்றது.
பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
முதன்முதலில் மத்திய மாநில உறவுகள் குறித்து ஆராய நீதிபதி ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசுதான் அமைத்தது. அந்த குழுவின்பரிந்துரைகளை சட்ட வல்லுநர்கள் குழுவும் ஆராய்ந்தது. இந்த மாநில கவுன்சிலர் கூட்டம் இப்போது விவாதித்து எடுக்க வேண்டிய முக்கியமான பிரச்சனைஒன்று உள்ளது. அதாவது சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு கவர்னரும், ஜனாதிபதியும் எத்தனை நாட்களுக்குள்அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பதை நாம் தீர்மானித்தாக வேண்டும்.
அடுத்ததாக மாநில அரசுகளை கலைப்பது பற்றிய பிரச்சனை முக்கியமானது. இதைப் பற்றி நாம் அவசியம் விவாதிக்க வேண்டும். இதுதொடர்பாகபொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மத்திய அரசுநினைத்தால் அரசியல் சட்டம் 356 வது பிரிவை பயன்படுத்தி எந்த நேரத்திலும் மாநில அரசைக் கலைக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதைமாற்றியாக வேண்டும். அரசியல் சட்டத்தில் இருந்து 356 வது பிரிவை நீக்கியாக வேண்டும்.
அதேபோல் மாநில அரசுகளின் அதிகார வரம்பில் மத்திய அரசு தலையீடு தடுக்கப்பட வேண்டும். இத்தகைய தலையீடு தேவையற்றது என்பது எங்கள்கருத்து. இப்படி தலையிடுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியல் சட்டத்தின் 365 வது பிரிவையும் நீக்க வேண்டும்.
நதிநீர் பிரச்சனைகள் இழுபறி நிலையில் இன்னமும் நீடிக்கக் கூடாது. இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமானால் எல்லா நதிகளையும்தேசியமயமாக்க வேண்டும். இது ஒன்றுதான் நிரந்தரத் தீர்வாக அமையும். அதற்கு முன்பாக நதிநீர் பிரச்சனை தொடர்பான நடுவர் மன்றத் தீர்ப்பைசம்பந்தப்பட்ட மாநிலங்கள் இரண்டாண்டுக்குள் அமல்படுத்தியாக வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட வேண்டும்.
சில மாநிலங்கள் இதுபோன்ற உத்தரவை காலதாமதப்படுத்தி வருகிறது. அதையும் நாம் கவனத்தில் கொண்டு விவாதிக்க வேண்டும் என்றார் முதல்வர்கருணாநிதி.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications