தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
மேற்கு வங்காளத்தில் அரசியல் வன்முறை: 11 பேர் பலி, 65 பேர் படுகாயம்

மிட்னாபூர் (மேற்கு வங்காளம்):

மேற்குவங்காளத்தில் கேஷ்பூர் பகுதியில் திரினாமூல் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் சிபிஐ (எம்) ஆதரவாளர்களுக்கும் இடையே கலவரம்ஏற்பட்டதில் 11 பேர் கொல்லப்பட்டார்கள். 65 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மாலை பேஹார் மாவட்டத்தில் பஞ்சாயத்துத் தேர்தலுக்காக வாக்காளர்கள் ஓட்டுப் போட்டுக்கொண்டிருந்த போது திரினாமூல்காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு கும்பல் ஓட்டுச் சாவடிக்குச் சென்று அங்கு ஓட்டுப் போட்டுக்கொண்டிருந்த மூன்று பேரை வெட்டிக் கொன்றது.இதையடுத்து கலவரம் வெடித்தது. இந்தத் தொடர் கலவரத்தில் இதுவரை 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 65 பேர் படுகாயமடைந்துள்ளனர்என்றும் தெரிய வந்துள்ளது.

கலவரம் நடந்த பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. இக்கலவரம் ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. பேஹார் மாவட்டம்மாதபான்கே அருகேயுள்ள கேஷ்பூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இரண்டு கட்சி ஆதரவாளர்களும் மோதிக்கொண்டார்கள்.

இரண்டு கட்சி ஆதரவாளர்களுக்கும் திடீரென்று ஏற்பட்ட கலவரத்தில் இறந்தவர்களில் 9 பேர் திரினாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்என்றும், 2 பேர் சிபிஐ(எம்) கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மிட்னாபூர் காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர், கவுரவ் தத்தா கூறுகையில், இரண்டு கட்சி ஆதரவாளர்களும் தங்களுக்குள் குண்டுகள் வீசியும்,பயங்கர ஆயுதங்களாலும் தாக்கிக் கொண்டார்கள்.

கோபிநாத் பாரி, பிர்பிரா, சக்கர்கவ் ஆகிய கிராமங்களில் 100 க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இந்த கலவரத்தில்170 வீடுகளில் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன

சபாங்க் பகுதியில் வசித்து வந்த சிபிஐ(எம்) கட்சித் தலைவர் ஹெம் பட்டாச்சாரியாவின் வீடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டது என்றார்.

இறந்து போனவர்களில் சிலரின் சடலங்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாஸ்த் அலி, அசாத் அலி, ஜஹார், ஜாம்ஷெத் அலி, சாக்மத் அலிஆகியோர் திரினாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஜூல்பாய், பெசாரப் ஆகியோர் சிபிஐஎம் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

மேற்குவங்காளத்தில் ஏற்பட்ட இந்த கலவரத்தால் 1500 க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர். பெரும்பாலோனார் அப்பகுதியிலிருந்துஅகதிகளாக அங்கிருந்து பக்கத்து டவுன்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

உயர்போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிர்மடைந்துள்ளனர். அதிரடிப்படையினரும், புறக்காவல் படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

கல்கத்தாவில் பொலிட்பீரோ உறுப்பினர் பிமான் போஸ் நிருபர்களிடம் கூறுகையில், மேற்குவங்காளத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. பல கிராமங்களில் மக்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மிட்னாபூர், ஹூக்ளி, பாங்க்ரா மாவட்டங்களில் பதட்டம்நிலவுகிறது.

திரினாமூல் காங்கிரஸ் கட்சியினர்தான் வன்முறையைத் தூண்டுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கதாகும் என்று திரினாமூல் காங்கிரஸ் கட்சியினரைக்குற்றம்சாட்டினார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+