தமிழகத்தில் இன்று
டான்சி -நில பேர ஊழல் வழக்கில் தன் மீதான மோசடிக் குற்றச் சாட்டை நீக்கும் வரை அவ்வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்கும்படி தனிநீ-திமன்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதி-முக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக ஆட்சியின் போது -முதல்வராக இருந்த ஜெயலலிதா, அரசு -நிறுவனமான "டான்சிக்கு சொந்தமான -நிலத்தை வாங்கினார். அரசுப் பதவியில்இருந்த ஜெயலலிதா, அரசு -நிலத்தை வாங்கியது தவறு என்றும், அதன் -மூலம் அரசுக்கு பத்திரப் பதிவில் இழப்பு ஏற்படுத்தி விட்டார் என்றும்ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்கள் மீது தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு தனி நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில்ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசா-ரித்த நீதிபதி தங்கராஜ், ஜனவ-ரி 13ம் தேதி வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்தார்.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அப்பீல் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஜெயலலிதாவைவழக்கில் இருந்து விடுவித்தது தவறு என்று தீர்ப்பளித்தது. மீண்டும் இவ்வழக்கில் ஜெயலலிதாவை சேர்ந்து தனி நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்என்றும் உத்தரவிடப்பட்டது.
இதன்படி தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான டான்சி வழக்கு விசாரணை துவங்கியது. இந்நிலையில் இவ்வழக்கில் ஜெயலலிதா மீது இந்திய தண்டனைச்சட்டம் 420வது பிரிவின் கீழ் மோசடிக் குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டை மட்டும் நீக்க உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளதாக கூறி, தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.
அதனடிப்படையில் குற்றப்பத்திரிகையில் 420வது பிரிவிலான குற்றச்சாட்டை நீக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தினார்.
ஆனால், தனி நீதிபதி அன்பழகன் இதை ஏற்க மறுத்து விட்டார். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அதுபற்றி குறிப்பிடப்படவில்லை என்று நிராகரித்துவிட்டார்.
இதையடுத்து ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். திங்கள் கிழமை அவர் தாக்கல் செய்த மனுவில், ""உச்ச நீதிமன்ற உத்தரவிட்ட பின்னரும் தனிநீதிபதி என் மீதான மோசடிக் குற்றச் சாட்டை நீக்க மறுத்து விட்டார். அந்த குற்றச் சாட்டு நீக்கப்படும் வரை தனி நீதிமன்றத்தில் டான்சி வழக்குவிசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications