கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து
குவைத் சிட்டி:
ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல் மேற்கொண்டதை மன்னித்து விட்டு ஈராக் நாட்டுடன் சமரசமாக போவதா அல்லது ஈராக் அதிபர் சதாம்உசேனை பதவியிலிருந்து அகற்றக் கடுமையாக பாடுபடுவதா என்பது குறித்து முடிவு எடுப்பதில் குவைத் அரசு குழப்பத்தில் உள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளாக ஈராக்குடனான போரில், குவைத்தை ஆதரித்து வந்த நாடுகள், தற்போது, குவைத்தைப் புறக்கணித்து விட்டு ஈராக்குடன் நட்புவைத்துக் கொள்ள முயற்சித்து வருகின்றன. இதனால் தற்போது ஈராக் ஏறக்குறைய தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்து வருகிறது.
குவைத்திலும் கூட பல எம்.பிக்கள், அரசியல் ஆய்வாளர்கள் ஈராக்குடன் நட்பு வைத்துக் கொள்ள குவைத் முயற்சி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தத்துவங்கியுள்ளனர். இப்போதைக்கு சதாம் உசேன் கவிழ்வது சாத்தியமில்லாததாக தோன்றுவதால் ஈராக்குடன் நட்பாக போவது நல்லது என்று அவர்கள்கூறியுள்ளனர்.
குர்த், ஷியா மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஈராக் எதிர்க்கட்சித் தலைவர்கள் தார்மீக மற்றும் அரசியல் ரீதியிலானஆதரவை குவைத்திற்குத் தெரிவித்துள்ளனர். சதாம் பதவியில் இருக்கும் வரை அவரை மிஞ்சுவது இயலாத காரியம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
தற்போது ஈராக்கில் தூதரகங்களைத் திறக்க வளைகுடா ஒருங்கிணைப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள பல நாடுகள் முடிவு செய்துள்ளன. இதுதொடர்பானநடவடிக்கைகளில் அவை இறங்கியுள்ளன. பஹ்ரைனும், விரைவில் பாக்தாத் நகரில் தனது தூதரகத்தைத் துவக்கும் என்று தெரிகிறது.
ஈராக் மீது கடந்த பத்து ஆண்டுகளாக விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை விலக்க வேண்டும் என்று வளைகுடா ஒருங்கிணைப்பு கவுன்சிலுக்கு கத்தார்கோரிக்கை விடுத்துள்ளது.
கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் ஹமத் பின் ஜசீம் அல் தானி, குவைத் சிட்டியில் நடந்த ஈராக்-குவைத் நல்லுறவு குறித்து அளித்த பேட்டியில்வளைகுடாப் பகுதியில் சுமூக சூழ்நிலையை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஈராக் மீதுள்ள பொருளாதாரத்தடைகள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்றார்.
ஈராக்கிற்கு ஆதரவான நடவடிக்கையில் ஓமனும் ஈடுபட்டுள்ளது. செளதி அரேபியா இதுவரை இதுதொடர்பாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.ஆனால் ஈராக் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை விலக்குவதற்கு பிரான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
தற்போதைய புதியநடவடிக்கைகள், பக்கத்து நாடுகள் மீது எதேச்சதிகரமான முறையில் நடந்து கொள்வதை ஈராக் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றுபுரிய வைப்பதற்காகவே, என்று வளைகுடா அரசியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா. தீர்மானங்களை ஏற்றுக் கொண்டால் ஈராக்குடன் உறவு: குவைத்
குவைத் நாட்டின் முதலாவது துணைப் பிரதமர் ஷேக் சபா அல் அகமது அல் சபா கூறுகையில், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் அனைத்தையும் ஈராக்ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் அந்த நாட்டுடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ள குவைத் தயார்.
இந்தப் பகுதியில் அமைதியுடனும், ஒத்துழைப்புடனும் இருப்பதைத் தவிர வேறு எங்களுக்கு வழியில்லை. இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் சேர்ந்திருப்பதுஒன்றுதான் எங்கள் முன் உள்ள ஒரே வழி.
குவைத் பிரதமருக்கான மூத்த ஆலோசகர் ஷேக் நசீர் அல் அகமது கூறுகையில், உண்மையான, நடைமுறைக்கு சாத்தியமாகும் வகையில் ஈராக்குடனானஉறவு இருக்க வேண்டும். எண்ணெய் மற்றும் சுற்றுச்சூழல் பிரிவுகளில் ஈராக்குடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என்றார்.
இந்த நிலையில், குவைத் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மஜேத் அல் ஷஹீன், ஈராக்குடன் உறவு வைத்துக் கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.அது ஆபத்தானது என்று அவர் எச்சரித்துள்ளார். குவைத் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் முகம்மது பஹர் அல் அலூம் கூறுகையில், ஈராக்குடன்எதற்காக உறவு வைத்துக் கொள்ள வேண்டும்.அதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறதா அங்கு என்று கேட்டுள்ளார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications