தமிழகத்தில் இன்று
டெல்லி:
இலங்கையில் நடைபெறும் போரில் சமாதானம் ஏற்படுத்துவது தொடர்பாக சமரசம் செய்ய நார்வே நாட்டின் அமைச்சர் தலைமையிலான தூதுக்குழுதிங்கள்கிழமை கொழும்பு செல்கிறது.
யாழ்ப்பாணத்தில் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இதனால் அங்கு வாழும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டதமிழ்மக்கள் அங்குள்ள கோவில்களிலும், பள்ளிக்கூடங்களிலும் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான ராணுவத்தினும் புலிகளிடம்சிக்கும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் போரை நிறுத்தும் முயற்சியில் நார்வே நாடு ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் டெல்லி வந்த நார்வே நாட்டுத் தூதுக் குழு இந்தியவெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கைச் சந்தித்து இந்தியாவும் போர் நிறுத்தத்திற்கு உதவி புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
இந்தச் சூழ்நிலையில், நார்வே குழு திங்கள்கிழமை கொழும்பு சென்று அங்கு அதிபர் சந்திரிகா, வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமர், எதிர்க்கட்சித்தலைவர் ரனில் விக்ரமசிங்கே ஆகியோரைச் சந்தித்து போர்நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இதனால் இலங்கையில் போர்நிறுத்தம்செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியா இலங்கை விவகாரம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார். தேவைப்பட்டால் நடவடிக்கைஎடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications