தமிழகத்தில் இன்று
கொழும்பு:
இலங்கைப் பிரச்சினையில் அந் நாட்டுக்கு உதவ தயார் நிலையில் இந்தியா உள்ளது. இலங்கைக்கும் உதவும்படி எந்த நேரத்திலும் அழைப்பு வரக்கூடும்என்ற நிலையில், இந்திய விமானப் படை மற்றும் கடற்படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் வட பகுதியான யாழ்ப்பாண தீபகற்பத்தில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.ராணுவத்திடமிருந்து பல பகுதிகளைக் கைப்பற்றியுள்ள விடுதலைப் புலிகள், அடுத்து, யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்துராணுவத்தினருடன் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
கடும் சண்டை காரணமாக இரு தரப்பிலும் பலர் இறந்துள்ளனர். புலிகளின் வேகமான முன்னேற்றம் மற்றும் முற்றுகை காரணமாக, யாழ்ப்பாணம்பகுதியில் சுமார் 30 ஆயிரம் இலங்கை ராணுவத்தினர் சிக்கியுள்ளனர். ராணுவத்தினரை மீட்க உதவவேண்டும் என்று இலங்கை ஏற்கெனவே விடுத்தகோரிக்கையை இந்தியா மறுத்துவிட்டது.
இந் நிலையில், இலங்கையின் கோரிக்கை குறித்து பிரதமர் வாஜ்பாய் தலைமையில் உயர்மட்ட பாதுகாப்புக் குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.அதில், இலங்கைக்கு உதவலாமா, வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக் கூட்டத்தில் இலங்கைக்கு உதவலாம் என்ற கருத்துஎட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்திய விமானப்படையும், கடற்படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கு உதவ முடிவெடுத்ததன் மூலம் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையேயான பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய இந்தியா தயாராகஉள்ளதையே இது காட்டுகிறது. ஏனெனில், மேற்கத்திய நாடுகள் பல இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண மத்தியஸ்தம் செய்த தயாராக இருப்பதாகஅறிவித்துள்ளன.
தெற்காசியப் பகுதியில் பெரிய சக்தியாக இந்தியா விளங்குகிறது. அந்த வகையில் தனது அண்டை நாடான இலங்கையில் நடந்து வரும் பெரிய சண்டையை முடிவுக்குக்கொண்டு வர இந்தியா விரும்புகிறது. தான் இருக்கும்போது மூன்றாவது நாடு இலங்கைப் பிரச்சினையில் தலையிடுவதை கொள்கை அளவில் இந்தியாவிரும்பவில்லை. இருப்பினும், தற்போது நார்வே நாட்டின் உயர்மட்டக் குழு இலங்கை வந்து அந் நாட்டுஅரசுடன் பேச்சு நடத்தி வருகிறது.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும் பேச்சு வார்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. பேச்சு வார்த்தைக்கு முன்பாக,யாழ்ப்பாணத்தைப் பிடித்துவிடும் தீவிர முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கவேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த பல அரசியல் கட்சிகளின் நிர்பந்தத்தையும் மீறிதடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இலங்கைப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிடாமல் இருந்த இந்தியா, இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நிச்சயம் ஏதாவதுநடவடிக்கை எடுக்கும் என்று நம்பப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications