தமிழகத்தில் இன்று
இலங்கை பெண் அகதிகள்
ராமேஸ்வரம்:
இலங்கை ராணுவத்திடம் சிக்கினால் மானபங்கப்படுத்தி விடுவார்கள் என்பதால் அதற்குப் பயந்து தமிழகத்திற்குத் தப்பி வந்தோம் என்றுராமேஸ்வரத்திற்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழ்ப் பெண்கள் கூறினார்கள்.
யாழ்ப்பாணத்தைப் பிடிக்க விடுதலைப் புலிகள் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக இலங்கை ராணுவமும் தீவிரமாகபோரிட்டுக் கொண்டுள்ளது. இந்த சண்டையினால் பாதிக்கப்பட்டுள்ளது அப்பாவிப் பொதுமக்கள்தான்.
சண்டை தீவிரமடைந்து கொண்டு வரும் நேரத்தில் யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து ஏராளமான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் தப்பி வருகின்றனர்.
இப்படிப் படகு மூலம் தமிழகம் வந்த சகோதரிகளான சரஸ்வதி, மாரியம்மாள் ஆகியோர் கூறுகையில், யாழ்ப்பாணத்தில் கடும் சண்டை நடந்து வருகிறது.எங்களது பெற்றோர், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா தப்பி வந்து விட்டனர். இதனால் நாங்கள் அநாதைகளாக விடப்பட்டோம்.
விறகு வெட்டியும், கூலி வேலை செய்தும் பிழைத்து வந்தோம். சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்பட்டோம். எங்களைப் போன்ற இளம் பெண்களுக்குதற்போது யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பில்லை. இலங்கை ராணுவத்திடம் நாங்கள் சிக்கி விட்டால், நிச்சயம் மானபங்கப்படுத்தப்படுவோம். இதற்குப்பயந்தே நாங்கள் தமிழகத்திற்கு தப்பி வந்தோம் என்றனர் கண்களில் நீர் மல்க.
சாவகச்சேரியைச் சேர்ந்த சுதர்சன் என்ற அகதி கூறுகையில், விடுதலைப் புலிகள் இந்தப் போரில் வெற்றி பெற்றாலும் தமிழர்களுக்குப் பலன் இல்லை.யாழ்ப்பாணம் தவிர பிறபகுதிகளில் வாழும் தமிழர்களை இலங்கை ராணுவம் துன்புறுத்தும். அவர்களை ராணுவத்தினர் அடித்தே கொன்று விடுவார்கள்என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications