நிகழ் காலத்தில் நில்!
கொழும்பு:
இலங்கை சுதந்திராக் கட்சித் தலைவர் குணவர்த்தனேயைக் கொல்ல மனித வெடிகுண்டுப் பெண் முயன்றார். ஆனால் குணவர்த்தனே சிறிய காயங்களுடன்அதிர்ஷ்டவசமாக தப்பினார். அந்தப் பெண் இறந்தார்.
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வரும் வேளையில் யாழ்ப்பாணத்திற்கு வெளியேயும்அவ்வப்போது வன்முறை நடந்து வருகிறது. சமீபத்தில் மட்டக்களப்பில் புத்தர் பிறந்த நாள் விழாவின் போது குண்டுவெடித்து 20-க்கும் மேற்பட்டோர்இறந்தனர்.
இந்த நிலையில் திரிகோணமலையில் சுதந்திராக் கட்சித் தலைவர் குணவர்த்தனேயைக் கொல்ல மனித வெடிகுண்டு மூலம் முயற்சிக்கப்பட்டது.ஆனால்அதிர்ஷ்டவசமாக அவர் காயங்களுடன் தப்பினார். ஆனால் மனித வெடிகுண்டுப் பெண் அங்கேயே இறந்தார்.
மனித வெடிகுண்டாக வந்த பெண் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications