தமிழகத்தில் இன்று
கள்-ளக் காத-லி-யு-டன் -கொஞ்-சி-க் கு-ழா-வி-ய போ-லீஸ் அதி-கா-ரி பிடி-பட்-டார்
சென்னை:
கள்ளக் காதலியுடன் கொஞ்சிக் குழாவிய போது கையும் களவுமாக பிடிபட்டார் ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்.
அவரை கட்டி வைத்து போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர் கிராம மக்கள்.
திருமணமான பெண்ணுடன் கள்ளக் காதல் தொடர்பு வைத்திருந்த அந்த சப்இன்பெக்டர் உடனடியாக இடமாற்றம்செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
இம்மாவட்டத்தில் தருவைகுளம் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்து போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராகபணியாற்றியவர் ராமகிருஷ்ணன். திருமணமாகாதவர். திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஜூனில் நச்சயதார்த்தம் -நடத்த அவரதுபெற்றோர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் ராமகிருஷ்ணனுக்கும், அப்பகுதியில் வசித்த பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டது. இப்பெண் ஏற்கனவேதிருமணமானவர். இப்பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்து போக ஆரம்பித்தார் ராமகிருஷ்ணன்.
போலீஸ் அதிகாரி என்பதால் ஊர் மக்களும் சற்று பயத்துடன் ஒதுங்கி இருந்தனர். ஆனால், அக்கம் பக்கத்தினரின் இந்ததயக்கத்தை சாதகமாக எடுத்துக் கொண்ட சப் இன்ஸ்பெக்டர், அப்பெண்ணின் வீட்டிற்கு உ-ரிமையோடு வர ஆரம்பித்தார்.
இதை போலீஸ் நிலையத்தில் இருந்த மற்ற போலீசாரிடம் கிராம மக்கள் கூறிப் பார்த்தனர். ஆனால், அதிகா-ரி என்பதால் அவரையாரும் கட்டுப்படுத்த டியவில்லை. இந் நிலையில் கிராம மக்கள் கூடிப் பேசினர். கையுள் களவுமாக பிடித்து உயரதிகாரிகளிடம்ஒப்படைத்து விடுவோம் என்று தீர்மானித்தனர்.
அத்திட்டப்படி தயாராக இருந்தனர். அது தெரியாமல் எப்போதும்போல் சப்இன்ஸ்பெக்டர் அப்பெண்ணின் வீட்டிற்கு வந்தார்.இரவு நேரம் என்பதால் அக்கம் பக்கத்தவர் தொந்தரவு இருக்காது என்று எண்ணிக் கொண்டு கள்ளக் காதலியுடன் கொஞ்சிக்குழாவினார்.
அப்போது அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த கிராம மக்கள், சப்இன்ஸ்பெக்டரை பிடித்து, அதே வீட்டில் கட்டிப் போட்டனர்.உயரதிகாரிகளுக்கு தகவல் தந்தனர். பரபரப்படைந்த உயரதிகாரிகள் விரைந்து வந்தனர். அந்த அதிகாரி மீது நிடவடிக்கைஎடுப்பதாக கிராம மக்களிடம் உறுதி அளித்து விட்டு, சப் இன்ஸ்பெக்டரை மீட்டனர்.
பின்னர் அவரை உடனடியாக தூத்துக்குடி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றினர்.