For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
தனி தமிழ் ஈ-ழத்-துக்-கு மு-தல் படி -தான் யாழ்பா-ணம்: வைகோ பேச்-சு

சென்னை:

இலங்கை பிரச்னைக்கு தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வை தர -முடியும். வேறு எந்த தீர்வாலும் இப்பிரச்னையை தீர்க்க -முடியாது என்று மதி-முகபொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெ-ரிவித்தார்.

இலங்கை பிரச்னையில் அதிபர் சந்திரிகா தெரிவித்து வரும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை என்றும், இதுவரை புலிகள் தரப்பில் இருந்துயாரும் என்னை சந்திக்கவில்லை என்றும் அவர் மேலும் தெ-ரிவித்தார்.

சென்னையில் புதன் கிழமை வைகோ அளித்த பேட்டி:

மதிமுகவின் மா-நில அளவிலான கூட்டம் ஜூலை 1 மற்றும் 2ம் தேதிகளில் ஈரோட்டில் -நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் -முதல்வர் கருணா----நிதி,மத்திய அமைச்சர்கள் அத்வானி, யஷ்வந்த் சின்கா, ஜார்ஜ் பெர்னாண்டஸ், மம்தா பானர்ஜி, ஆந்திர -முதல்வர் சந்திரபாபு -நாயுடு, பஞ்சாப் -முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

செப்டம்பர் 14ம் தேதி மதிமுக மா-நில -நிர்வாகிகள் தேர்தல் -நடைபெறுகிறது. மே 29ம் தேதி சிவகாசியில் ஊனற்றோர் பாதுகாப்பு -முகாம்-நடத்தப்படுகிறது.

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு ஒரு லட்சம் தமிழர்களை அகதிகளாக அனுப்பவும், அவர்களில் 50 ஆயிரம் பேர் புலிகளிடம் பயிற்சி பெற்றவர்களைஊடுருவச் செய்யவும் பிரபாகரன் திட்டமிட்டுள்ளார் என்று இலங்கை அதிபர் சந்திரிகா கூறியிருப்பது -முற்றிலும் தவறானது.

இலங்கையில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத அளவுக்கு பத்தி-ரிகைகள், செய்தி -நிறுவனங்கள் கடும் தணிக்கை செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.இலங்கையில் மனித உ-ரிமை மீறல்கள் 95ம் ஆண்டில் இருந்து தொடர்கின்றன. இதுவரை 10 லட்சம் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் -நலன் கருதி புலிகளை ஆத-ரிக்கக் கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறி வருவது -சரியானதல்ல. -நாங்களும் தேசப்பற்று மிக்கவர்கள் தான்.இலங்கை பிரச்னையில் தமிழர்கள் பாதிக்கப்படுவதை தான் எதிர்க்கிறோம். அது உள்நாட்டு பிரச்னை என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறுகின்றன.அப்படியென்றால் அதை தீர்க்க வேண்டியது அந்-நாட்டின் பொறுப்பு. அதில் இந்தியா தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

இப்பிரச்னையில் எங்கள் நிலை குறித்து பிரதமரை சந்தித்துப் பேசினேன். இலங்கை பிரச்-சனையில் பிரதமர் வாஜ்பாய் எடுத்துள்ள -முடிவு ச-ரியானது.இனிமேல் என்ன -முடிவெடுத்தாலும், அதற்கு -முன் எல்லோரையும் அழைத்துப் பேசி தான் அவர் முடிவெடுப்பார்.

தமிழர் தலைவர்களை கொன்று குவிக்கும் புலிகளால் இலங்கை தமிழர்களை காப்பாற்ற முடியாது என்று -முதல்வர் கருணா-நிதி தெ-ரிவித்துள்ள கருத்து பற்றி-நான் எதுவும் கூற விரும்பவில்லை. அது தி--முகவின் கருத்து. இதனால் எங்களுக்கும் தி-முகவுக்கும் எந்த வேறுபாடும் எழவில்லை.

எங்களை பொருத்தவரையில் தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வு தரும். வேறு எந்த தீர்வும் இலங்கை பிரச்னையை தீர்க்க உதவாது. யாழ்பாணத்தை பிடித்துவிட்டாலும் கூட புலிகளால் தமிழ் ஈழத்தை அடைந்து விட -முடியாது. தமிழ் ஈழம் அடைவதற்கான -முதல் படியாக அதை கருதலாம்.

1948 முதல் 2000 வரை 50 ஆண்டுகளாக இலங்கை அரசு தமிழர் பிரச்சனை தொடர்பாக பல உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால், எதையும்அது -நிறைவேற்றவில்லை.

புலிகளுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் எந்த சமரச -மு-யற்சியிலும் -நான் ஈடுபடவில்லை.

இதுவரை புலிகள் தரப்பில் இருந்து யாரும் என்னை சந்திக்க வரவில்லை. நானும் சந்திக்கவில்லை. நான் தேசிய ஜன-நாயகக் கூட்டணியில் இருக்கிறேன்.என்னுடைய கருத்துக்களை பிரதம-ரிடம் தெ-ரிவித்து வருகிறேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X