தமிழகத்தில் இன்று
பாட்னா:
பிகார் முதல்வர் ராப்ரி தேவி போட்டியிட்ட ரகோபூர் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின.
பிகாரில் மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் 55 சதவீத வாக்குகள் பதிவாகின.
பிகார் உள்பட பல்வேறு மாநிலங்களில் வெள்ளிக்கிழமை சட்டசபை இடைத் தேர்தல் நடந்தது. பிகாரில் மொத்தம் 6 லட்சம் வாக்காளர்கள்வாக்களித்தனர். இதில் ரகோபூர் தொகுதியில் முதல்வர் ராப்ரி தேவி போட்டியிட்டார்.
மொத்தம் 55 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இத்தேர்தலில் மொத்தம் 25 வேட்பாளர்கள் களத்தில்நின்றனர்.
முதல்வர் ராப்ரி தேவியை எதிர்த்து ஐக்கிய ஜனதாதளம் சார்பில் வீரா தேவி போட்டியிட்டார். இத் தொகுதியில் போட்டியிட்டு வென்றிருந்த முன்னாள்முதல்வரும், ராப்ரியின் கணவருமானலாலு பிரசாத் யாதவ், தானாபூர் தொகுதியை வைத்துக் கொண்டு இத்தொகுதியை ராஜினாமா செய்தார்.
ராப்ரி போட்டியிட்ட ரகோபூர் தொகுதியில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. மூன்று தொகுதிகளிலும், இங்குதான் அதிக வாக்குகள் பதிவாகியது. நிர்சாதொகுதியில் 50 சதவீதமும், ஜமூய் தொகுதியில் 45 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
கடந்த பேரவைத் தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறையில் 36 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 13 பேர் போலீஸ்காரர்கள். இந்த தேர்தலில் 6 பேர்கொல்லப்பட்டனர். மே 29-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
அஸ்ஸாம்:
அஸ்ஸாமில் மூன்று தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் 55 சதவீத வாக்குகள் பதிவாகின. கடும் குளிர் மற்றும் மழை பெய்ததால் துவக்கத்தில்வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. பிற்பகலுக்கு மேல்தான் மழை குறைந்தது. இதையடுத்து வாக்குப் பதிவு சூடு பிடித்தது.
வாக்குப் பதிவில் எந்தவித அசம்பாவிதச் சம்பவமும் நடைபெறவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். நல்பாரி தொகுதியில் 60 சதவீதவாக்குகள் பதிவாகின. பபாரிபூர் தொகுதியில் 50 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் 21 வேட்பாளர்கள் மூன்று தொகுதிகளில்போட்டியிட்டனர். தேர்தல் நடந்த மற்றொரு தொகுதி கரீம்கஞ்ச் வடக்கு ஆகும்.
மேகாலயா:
மேகாலயாவில் மைராங் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் வன்முறை ஏதும் நடக்கவில்லை.மொத்தம் 31 வாக்குச் சாவடிகள் தேர்தலுக்காக அமைக்கப்பட்டிருந்தன.
பிற்பகல் வரை வாக்குப் பதிவு காலநிலை காரணமாக மந்தமாக இருந்தது. பிற்பகல் 1 மணி வரை 30 சதவீத வாக்குகள் மட்டுமேபதிவாகியிருந்தன. பிற்பகலுக்கு மேல்தான் வாக்குப் பதிவில் விறுவிறுப்பு ஏற்பட்டது.
உ.பி:
உத்தரபிரதேச மாநிலத்தில் சோரன் தொகுதியில் நடந்த தேர்தலில் 45 சதவீத வாக்குகள் பதிவாகியது. மொத்தம் 16 வேட்பாளர்கள் களத்தில்இருந்தனர். தேர்தலில் எந்த வன்முறையும் நடைபெறவில்லை.
ஆந்திரம்:
ஆந்திர மாநிலம் செவல்லா, போங்கிர் தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. வன்முறைச் சம்பவங்கள் ஏதும்நடக்கவில்லை. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications