பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: காயங்-க-ளு-டன் களம் காணும் வீராங்கனைகள்
பாரீஸ்:
டென்னிஸ் கிரான்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் போட்டியில் இந்த ஆண்டு மகளிர் பிரிவில் பலமுன்னணி வீராங்கனைகள் காயமடைந்த நிலையில் இருப்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்றஎதிர்பார்ப்பு உள்ளது.
மே 29-ம் தேதி பாரீஸில் இந்த ஆண்டின் இரண்டாவது கிரான்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்போட்டி துவங்கவுள்ளது. பல வீராங்கனைகள் காயமடைந்த நிலையில் களம் இறங்குகிறார்கள். எனவே இறுதிப்போட்டியில் பெரிய வீராங்கனைகள் யாரும் இடம் பெற்றால் அது ஆச்சரியம்தான்.
முதல் நிலை வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸ், இந்த மாத இறுதியில் ரோமில் நடந்த போட்டியின்போது கால் வலிகாரணமாக விலகினார். இரண்டாவது நிலை வீராங்கனை லிண்ட்சே டேவன்போர்ட், முதுகு வலி காரணமாக ரோம்போட்டியிலிருந்து வெளியேறினார். இதே போல மாட்ரிட் போட்டியிலும் அவர் விளையாடவில்லை.
எட்டாவது நிலை வீராங்கனையும், அமெரிக்க ஓபன் சாம்பியனுமான செரீனா வில்லியம்ஸ், முழங்கால் வலியால்அவதிப்படுகிறார். கடந்த ஆறு வாரமாக அவர் போட்டிகள் எதிலும் பங்கற்ேகவில்லை. இதேபோல, செரீனாவின்சதோதரியும், நான்காவது நிலை வீராங்கனையுமான வீனஸ் வில்லியம்ஸும், கை மணிக்கட்டில் உள்ள வலியால்அவதிப்படுகிறார்.
12-வது நிலை வீராங்கனை ஆங்கே ஹியூபரும் சரியாக இல்லை. தசைப் பிடிப்பு காரணமாக ஸ்டராஸ்போர்க்போட்டியில் அவர் விளையாடவில்லை. அன்ன கோர்னிகோவாவும், கணுக்கால் வலி காரணமாக ரோம்போட்டியிலிருந்து எதிலுமே கலந்துகொள்ளவில்லை.
காயமடைந்திருந்தாலும் மனதளவில் மார்ட்டினா ஹிங்கிஸ் உறுதியாக இருப்பதாகவே கூறியுள்ளார். கடந்தஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டியின்போது இறுதிப் போட்டியில் ஸ்டெபி கிராபுடன் மோதி அவர் தோல்வியுற்றார்.இதனால் விரக்தியில், பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. தாயார் வற்புறுத்திய பிறகே அவர் கலந்துகொண்டார். இதனால் அவருக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டது. அதைத் துடைக்கும் வகையில் இம்முறை பட்டத்தைவெல்ல முயற்சிப்பார் என நம்பலாம்.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications