தமிழகத்தில் இன்று
2 ஆண்டு-க-ளில் எல்-லா கிராமங்களுக்கும் தொலைபேசி த-ரு-வா-ராம் அ-மைச்-சர்
சென்னை:
2002ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள எல்லா கிராமங்களையும் தொலைபேசி மூலம் இணைத்து விடுவோம்என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
சென்னையில் அவர் வெள்ளிக் கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மாலையில்செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் 17 ஆயிரத்து 991 கிராமங்கள் உள்ளன. அவற்றில் 17845 கிராமங்களுக்கு தொலைபேசி வசதிசெய்து தரப்பட்டுள்ளது. மீதமுள்ள கிராமங்களில் 99 கிராமங்களில் மக்கள் வசிக்கவில்லை. எனவே 55கிராமங்களுக்கு தான் தொலைபேசி வசதி செய்து தரப்பட வேண்டும். ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அதையும் செய்துதந்து விடுவோம்.
தமிழ்நாட்டில் தொலைபேசி வசதி கேட்டு விண்ணப்பித்தவர்கள் 5 லட்சத்து 74 ஆயிரம் பேர் காத்திருப்போர்பட்டியலில் உள்ளனர். சென்னையில் மட்டும் 9 லட்சத்து 68 ஆயிரத்து 243 தொலைபேசி இணைப்புகள் உள்ளன.
தமிழ்நாட்டில் தொபைேசி இணைப்புகளில் ஏற்படும் கோளாறுகள் 15 சதவீதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.ஓரிடத்தில் தொலைபேசி தொடர்பான புகார்கள் வந்தால் சரி செய்வதற்கு 70 மணி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இதை 20 மணி நேரமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு எம்.டி.என்.எல். வசதி தேவையே இல்லை. அதை விட 10 மடங்கு சிறப்பாக சென்னை தொலைபேசிசெயல்படுகிறது.
2001ல் தொலைத் தொடர்புத் துறை கார்ப்பரேஷனாக மாறவிருப்பதால், எம்.டி.என்.எல். அவசியமில்லை.
தொலைத் தொடர்பு துறையில் தமிழகத்தில் தான் அதிக வருவாய் கிடைக்கிறது. எனவே வளர்ச்சிப் பணிகளுக்காக418 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
அதற்கு முந்தைய ஆண்டில் 250 கோடி செலவிடப்பட்டது. இன்னும் செலவிட துறை தயாராக உள்ளது.
நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் தொலைத்தொடர்புத் துறை மூலம் மொபைல் போன் வசதி அறிகப்படுத்தப்படும்.சென்னை, மதுரை, கோவை, மாமல்லபுரம் உள்ளிட்ட6 பகுதிகளில் இந்த வசதி கிடைக்கும்.
2002க்குள் இந்தியாவில் எல்லா கிராமங்களிலும் தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டு விடும். அனைத்துகிராமங்களையும் தொலைபேசி மூலம் இணைத்து விடுவோம் என்றார் பாஸ்வான்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications