தமிழகத்தில் இன்று
கடத்-தப்-பட்-ட இந்-தி-ய விமா-ன பைலட்-டுக்-கு வி-ரு---து
டெல்லி:
காத்மாண்டு நகரிலிருந்து ஆப்கானிஸ்தானுக்குக் கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஓட்டிய பைலட் தேவி சரணுக்கு, அமரிக்காவிலுள்ள உலகவளர்ச்சிக் கழகம், "சேப் ஸ்கைஸ் (safe skies award) விருது வழங்கிக் கெளரவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி காத்மாண்டு நகரிலிருந்து டெல்லி சென்ற இந்தியன்ஏர்லைன்ஸ் விமானம், காஷ்மீர் தீவிரவாதிகள் சிலரால் பாகிஸ்தானுக்குக்கடத்தப்பட்டது. அங்கிருந்து துபாய்க்கும் இறுதியில் ஆப்கானிஸ்தானுக்கும்கடத்தப்பட்டது. துபாயில் விமானம் இருந்தபோது, ஒரு பயணி கொல்லப்பட்டார்.
கடத்தப்பட்ட விமானத்தின் பைலட்டாக தேவி சரண் இருந்தார். விமானம் பல மணிநேரம் தொடர்ந்து பறந்து கொண்டிருந்தபோதும் அயராமல் ஓட்டி உலகின் கவனத்தைக்கவர்ந்தார் சரண். அவருக்குத் தற்போது உலக வளர்ச்சிக் கழகத்தின் விருதுவழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் புதன்கிழமை நடந்த குளோபல் சூப்பர் புராஜக்ட்மாநாட்டில் இந்த விருது சரணுக்கு வழங்கப்பட்டது. 10,000 டாலர் பரிசுத் தொகைகொண்டது இந்த விருது. வாழ்வா, சாவா என்ற கடுமையான சூழ்நிலையிலும்,அயராமலும், துணிவோடும், விமானத்தை செலுத்தி பயணிகளின் உயிரைக்காத்தமைக்காக சரணுக்கு இந்த விருது வழங்கப்படுவதாக விருதுக் கமிட்டியினர்கூறினர்.
விருதைப் பெற்றுக் கொண்டு சரண் பேசுகையில், இந்த விருது எனக்கு மட்டும்சொந்தமானதல்ல. என்னுடன் பணியாற்றுபவர்கள், நான் ஓட்டிய விமானத்தின்பயணிகள் ஆகியோருக்கும் சொந்தமானது இது.
விமானத் துறையில் பணியாற்றும் எங்களைப் போன்றவர்களும், உலகம் முழுவதிலும்விமானத்தில் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளும் ஹைஜாக் என்ற நிழல்பீதியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஹைஜாக் சர்வதேச குற்றம். இதை உலக சமுதாயம் ஒரே குரலில் எதிர்க்க வேண்டும்.இக்குற்றத்தைக் களையஒருங்கிணைந்து முயல வேண்டும்.
தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்திய பிறகு, பயணிகளை பத்திரமாக மீட்பதற்காகஇந்திய அரசு, ஐ.நா. சபை சார்பில் தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்திய தூதர்கள், உலகபத்திரிகைகள் ஆகியோர் மிகச் சிறப்-பா-க செயல்பட்டார்கள் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications