தமிழகத்தில் இன்று
அ-சுத்-த-மா-கி-விட்-ட இந்தியக் கடல்
டெல்லி:
இந்திய கடல், இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு அசுத்தமாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
கடல் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது. மும்பையில்தான் கடலும், கடற் பகுதிகளும் மிகவும் மோசமாகஉள்ளன. இங்கு 5 கிலோமீட்டர் உள்ளே சென்றால்தான் கடல், கடலாக உள்ளது.
தொழிற்சாலைகள் மற்றும் மாநகராட்சி கொண்டு வந்து கொட்டும் குப்பைகளால் மும்பை கடற் பகுதி மிகவும் அசுத்தமாக, மாசடைந்து உள்ளது.மும்பை கடலில் கரைந்த நிலையிலுள்ள ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக உள்ளது.இதுவே கடல் அசுத்தமடைய காரணம்.
மொத்தம் 82 இடங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 11 நிறுவனங்கள் இதில் ஈடுபட்டன. கடலில் 25 கிலோமீட்டர் தொலைவு வரை இந்த ஆய்வுநடத்தப்பட்டது.
குஜராத்தில், அலாங்க் கடற்பகுதியில், கப்பலை உடைக்கும் நிலையம் உள்ளது. இதனால் அப்பகுதி கடலில் பெட்ரோலியம் ஹைட்ரோகார்பன்களும்,திடப் பொருட்களும் அதிக அளவு உள்ளன.
போர்பந்தர் அருகே, 2 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ளேயே கடல் அசுத்தமடைந்துள்ளது. இப்பகுதியில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளதால்ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக உள்ளது.
மகாராஷ்டிராவில், தானே, வெர்சோவா, மாஹிம் பகுதிகளில் சுற்றுச்சூழல் நிலை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இப்பகுதியில் அலைகள் குறைந்தஅளவில் இருப்பதால் ஆக்சிஜன் அளவும் குறைவாக காணப்படுகிறது. உல்ஹாஸ் பகுதியில் தாமிரம் போன்ற பொருட்களும், மெர்க்குரியும் அதிகம் உள்ளது.
கர்நாடகத்தில் மங்களூர் அருகே, ஹெட்டிரோபோபிக் பாக்டீரியா அதிகம் காணப்படுகிறது. சாக்கடைகள் மற்றும் கழிவு நீர் அதிக அளவு கடலில்சேருவதே இதற்குக் காரணம்.
திருவனந்தபுரத்தில் டைட்டானியம் அதிக அளவில் இருப்பதால் அப்பகுதியில் தாவர, உயிரினங்கள் குறைவாக உள்ளது.
சென்னை கொஞ்சம் மோசம்!
தமிழகத்தில் சென்னை கடற் பகுதியைத் தவிர பிற கடற் பகுதிகள் ஓரளவு சுத்தமாக உள்ளன. சென்னை கடற் பகுதியில் ஆக்சிஜன் அளவு மிகவும்குறைவாக உள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனம், காக்கிநாடா பகுதிகளில் அதிக அளவு சாக்கடை நீர் வந்து சேருகிறது.
மேற்கு வங்கம், ஒரிசா கடற் பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசு அதிகம் இல்லை. இருப்பினும், பூரி கடற் பகுதியில் அதிக அளவு பாக்டீரியா உள்ளது.
அந்தமான், நிக்கோபார் மற்றும் லட்சத்தீவு கடற் பகுதிகள் மிகவும் சுத்தமாக உள்ளன. போர்ட் பிளேர் துறைமுகத்தைச் சுற்றிலும் மட்டுமேகடல் நீர் அசுத்தமாக உள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications