தமிழகத்தில் இன்று
40 மாணவர்களுக்கு "இளம் திருக்குறள் தூதர்" பட்டம்
சென்னை:
திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களையும் கரைத்துக் குடித்த 40 மாணவ மாணவிகளுக்கு இளம் திருக்குறள்தூதர் என்ற பட்டமும் திருக்குறள் மணி என்ற விருதும் வழங்கப்படுகிறது.
உலகிலேயே முதல் முறையாக 1330 குறள்களையும் அடிபிறழாமல் மனப்பாடம் செய்ததோடு மட்டுமல்லாமல்அதன் பொருள் உள்பட அத்தனை விஷயங்களையும் தலைகீழாக கேட்டாலும் கூட சொல்லும் அளவுக்கு குறளைகற்றுத் தேர்ந்தவர்கள் தான் இந்த 40 மாணவ மாணவிகளும் என்றார் குறள் பயிற்சி சென்னை பல்கலைக்கழகபேராசிரியர் மோகனரசு.
பட்டிதொட்டிகளில் இருக்கும் மாணவர்கள் குறள் பரிசைப் பெறும் நோக்கிலும், குறள் நெறியைப் பரப்பும்நோக்கிலும் கோடை விடுமுறை திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
இதற்கான நேர்முகத் தேர்வு ஏப்ரல் 30 ம் தேதி நடந்தது. இதில் தமிழகம் முழுவதிலுமிருந்து 87 மாணவமாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களில் 40 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட 40 பேருக்கும் ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது. 1330 குறள்களை எப்படிக் கேட்டாலும்சொல்லும் வகையில் 66 முறைகளில் பயிற்சிகள் பெற்றனர்.
இவர்களுக்கு திருக்குறள் தூதர் என்று பொறுப்பும் திருக்குறள் மணி என்ற விருதும் வரும் 29 ம் தேதி சென்னையில்நடக்கும் விழாவில் வழங்கப்படும்.
ஜூலை மாதம் முதல் திருக்குறள் போட்டி சென்னையில் நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்குகுறள் பரிசு வழங்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications