தமிழகத்தில் இன்று
போலி பாஸ்போர்ட் மூலம் விசா வாங்க முயன்ற போலி கு-டும்-பம்
சென்னை:
சென்னை அமெரிக்கத் தூதரகத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் விசா வாங்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த கணவன் மனைவி மற்றும் மகள்கள் -என்-று கூறிக் கொண்-டு 4 பேர் அமெரிக்-கா செல்-ல விசா கேட்-டு சென்-னைஅமெ-ரிக்-க தூத-ர-கத்-தில் விண்ணப்பித்திருந்தனர். அவர்களது பெயர் பேக் அப்துல் ஹக்கீம், பேக் பிரகெளஸ், பேக் ஷெனாஸ் அப்துல், பேக் நாகித் அப்துல்என்-று கு-றிப்பிட்-டி--ருந்-த-னர்.
இந்த நால்வரும் ஹைதராபாத்தில் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளுடன் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வந்தனர். அங்குள்ள அதிகாரிகள்அந்த பாஸ்போர்ட்களை பார்த்ததும் சந்தேகமடைந்தனர்.
உடனடியாக மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர். அவர்கள் விரைந்து வந்து நால்வருடனும் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவை போலி பாஸ்போர்ட்டுக்கள் என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் உண்மையில் ஹைதராபாத்தில் வசிக்கவில்லை என்றும்,மும்பையைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.
இவர்களது உண்மையான பெயர்கள் வேறு என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. மும்பையை சேர்ந்த அன்வர் இப்ராஹிம் ஷேக் என்பவர் அகமதாபாத்தைச்சேர்ந்த வீணா (29) நீலம் (15), நசியா(18) ஆகிய மூன்று பெண்களுடன் அமெரிக்கா செல்ல திட்டமிட்டருந்ததாக தெரிய வந்தது.
போலி பாஸ்போர்ட் மூலம் பெற்ற விசாக்களை வேறு நபர்களுக்கு விற்று பணம் சம்பாதிக்கும் திட்டமும் இவர்களுக்கு இருந்துள்ளது.
இக்கும்பலின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications