தமிழகத்தில் இன்று
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை மாற்றி அமைக்கப்பட்டது. முன்னாள்மத்திய அமைச்சரான நிதிஷ் குமார் மீண்டும் மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவருடன்பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த அர்ஜுன் சேதி, பிரிஜ் கிஷோர் திரிபாதி ஆகிய புதியவர்களும் மத்தியஅமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.
நிதிஷ்குமார், நவீன் பட்நாயக், உமா பாரதி ஆகியோர் மத்திய அமைச்சர் பதவிகளை ராஜிநாமா செய்ததை அடுத்துமத்திய அமைச்சரவையில் 3 இடங்கள் காலியாக இருந்தன. அந்த மூன்று இடங்களுக்கும் மூன்று பேரை நியமித்தவாஜ்பாய், ஏற்கெனவே உள்ள சில அமைச்சர்களின் இலாகாக்கள் சிலவற்றை மாற்றியமைத்துள்ளார்.
வெள்ளிக்கிழமை பதவியேற்ற நிதிஷ்குமாருக்கு கேபினெட் அமைச்சர் அந்தஸ்துடன் வேளாண்துறைஒதுக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் சேதிக்கும் கேபினெட் அமைச்சர் அந்தஸ்துடன் நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.பிரிஜ் கிஷோர் திரிபாதிக்கு எஃகுத் துறை இணை அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது.
இலாகா மாற்றம் செய்யப்பட்ட அமைச்சர்கள் விவரம்:
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பதவி கேபினெட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுஅத்துறை அமைச்சராக சி.பி. தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நகர்ப்புற மேம்பாட்டுத் துறையைக் கவனித்து வரும் ஜக்மோகன், வறுமை ஒழிப்புத் துறையையும் கூடுதலாகக்கவனிப்பார்.
அனந்த் குமார் இனி சுற்றலா மற்றம் கலாச்சாரத் துறையை மட்டும் கவனிப்பார். அனந்த் குமாரிடமிருந்த இளைஞர்விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறையை இனி சுரங்கத் துறை அமைச்சர் எஸ்.எஸ். தீன்ஷா கூடுதலாகக்கவனித்துக் கொள்வார்.
தமிழகத்தைச் சேர்ந்த என்.டி. சண்முகத்திடமிருந்த சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கேபினெட் அமைச்சருக்குஉரிய துறையாக உயர்த்தப்பட்டுள்ளது. சண்முகத்துக்கு தற்போது நிலக்கரித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
சுரங்கம் மற்றும் கனிமத்துறை இணை அமைச்சர் ரீதா வர்மாவிடம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையும், உணவுபதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் சயத் ஷானவாஸ் ஹுசேனிடம் இளைஞர் விவகாரம் மற்றும்விளையாட்டுத் துறையும் வழங்கப்பட்டுள்ளது.
இணை அமைச்சர்கள் ஹுகும் தியோ நாராயண் யாதவுக்கு தரைவழிப் போக்குவரத்துத் துறையும், தேவேந்திரபிரதானுக்கு வேளாண் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மனித வளத்துறை இணை அமைச்சர் ஜெய்சிங் ராவ் கெய்க்வாட் பாட்டீலிடம் சுரங்கத்துறையும், உணவுபதப்படுத்துதல் துறையைக் கவனித்து வந்த அமைச்சர் சாவோபா சிங்கிடம் கலாசாரம், இளைஞர் விவகாரம் மற்றும்விளையாட்டுத் துறையும் வழங்கப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications