தமிழகத்தில் இன்று
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி பயணம்: தலை-வர் மாற்-றம்?
சென்னை:
காங்கிரஸ் மேலிடத்தின் அவசர அழைப்பை ஏற்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் திண்டிவனம் ராமமூர்த்தி, குமரிஅனந்தன், தங்கபாலு ஆகியோர் ஒரேவிமானத்தில் டெல்லி சென்றுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் நியமனம்; தமாகாவுடனான தோழமையில் நெருக்கம் ஆகிய விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காகஇவர்கள் இருவரையும் உடனடியாக டெல்லி புறப்பட்டு வரும்படி காங்கிரஸ் மேலிடத் தலைவர் குலாம் நபி ஆசாத் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி டெல்லி சென்றுள்ள திண்டிவனம் ராமமூர்த்தி, குமரிஅனந்தன, தங்கபாலு ஆகிய மூவரும் திங்கள் கிழமை ஆசாத்துடன் ஆலோசனைநடத்துகின்றனர். கடந்த வாரத்தில் தான் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று ஆசாத் அறிவித்திருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழக காங்கிரஸ் கட்சி, தமாகா தலைவர் மூப்பனார் தலைமையில் ஒருங்கிணைந்து செயல்பட முன் வந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாவின்உத்தரவின் பேரில் இந்த கூட்டு நடவடிக்கைக்கு கடந்த 24ம் தேதி சென்னையில் பிள்ளையார் சுழி போடப்பட்டது. இது தொடர்பாகவும் இன்றையசந்திப்பில் விவாதிக்கப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மீண்டும் வந்து விட வேண்டும் என்று குமரிஅனந்தனும், தங்கபாலுவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதேபோல்மீண்டும் தலைமை பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று திண்டிவனம் ராமமூர்த்தி முயற்சிக்கிறார்.
இவர்களுக்கு இடையில் இவ்விஷயத்தில் கடும் போட்டி நிலவும் வேளையில், மூவரும் ஒரே விமானத்தில் ஒற்றுமையாக டெல்லி சென்றுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications