தமிழகத்தில் இன்று
சாவகச்சேரியில் சிக்-கி-யுள்-ள 15,000 அப்-பா-வித் தமி-ழர்-கள்
டெல்லி:
இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து கொண்டிருக்கும் சாவகச்சேரிப் பகுதியில் 15,000க்கும் மேற்பட்டபொதுமக்கள் மாட்டிக் கொண்டுள்ளதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் அப்பகுதியை விட்டு வெளியேறி விடாமல், இலங்கை ராணுவம், மார்ட்டர் மற்றும் ஆர்ட்டில்லரி தாக்குதல்களைமேற்கொண்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் லண்டன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டிருந்தது. அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருந்ததாவது:
பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற முடியாமல் அப்பாவிப் பொதுமக்கள் தவித்துக் கொண்டுள்ளனர். விடுதலைப் புலிள் தரப்பில் அறிவிக்கப்பட்டபோர்நிறுத்தத்தையடுத்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் காத்திருந்தனர்.ஆனால்பொதுமக்களை வெளியேற விடாமல் ராணுவம் தடுத்து வருகிறது.
பொதுமக்களை கேடயமாக இலங்கை ராணுவத்தினர் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் இலங்கை அரசை நிர்பந்திக்கவேண்டும். இதன் மூலம் வான்வழித் தாக்குதல், தொடர் குண்டு வீச்ச ஆகியவற்றிற்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாக நேரிடும்.
அப்பாவி பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் விடுதலைப் புலிகள், தற்காலிக போர் நிறுத்தத்தைஅறிவித்திருந்தனர். ஆனால் இதை ராணுவம் மதிக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை முழுவதும் சாவகச்சேரி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் ராணுவம்தொடர்ந்து குண்டுவீச்சில் ஈடுபட்டிருந்தது. வான் வழித் தாக்குதலிலும் ராணுவம் ஈடுபட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications