3-வது டெஸ்ட்: வெற்றி பெற மேற்கிந்தியத் தீவுகளுக்கு தேவை 72 ரன்கள்
செயின்ட் ஜான்ஸ் (ஆன்டிகுவா):
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி கிரிக்கெட்டில் வெற்றி பெறும் நிலையில் மேற்கிந்தியத் தீவுகள்அணி உள்ளது. 5-ம் நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் வெற்றி பெற அந்த அணிக்கு இன்னும் 72 ரன்கள்தேவை. அதனிடம் 6 விக்கெட்டுகள் உள்ளன.
5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் என்ற நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை பாகிஸ்தான்ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கிங்கின் சிறப்பான பந்து வீச்சினால் 219ரன்களுக்குப் பாகிஸ்தான் ஆட்டமிழந்தது. கிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதல் இன்னிங்ஸில் 3 ரன்கள் முன்னிலை பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் தனது இரண்டாவது இன்னிங்ஸில் 216ரன்கள் எடுத்தால் 3-வது டெஸ்டை வெல்வது மட்டுமல்லாமல், டெஸ்ட் தொடரையும் வெல்ல முடியும் என்றநிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
ஆட்ட நேர இறுதியில் அந்த அணி 4 விக்கட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றி பெற அந்த அணிக்குஇன்னும் 72 ரன்களே தேவை. துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அவுட்டாகி அணியின் எண்ணிக்கை 31 ஆகஇருந்தபோது அடுத்த ஆட வந்த வேவல் ஹைன்ட்ஸ் பொறுப்பை உணர்ந்து விளையாடினார்.
அவரும், சந்தர்பாலும் இணைந்து விளையாடி 53 ரன்கள் சேர்த்தனர். இந் நிலையில், சந்தர்பால் 31 ரன்னிலும்,ஹைன்ட்ஸ் 63 ரன்னிலும் அவுட்டானார்கள். கேப்டன் ஜிம்மி ஆடம்ஸ் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.மழையின் காரணமாக, 4-ம் நாள் ஆட்டம் இறுதியில் தடைபட்டது
.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications