தமிழகத்தில் இன்று
டெல்லி:
இந்தியாவில் போலியோ நோயை ஒழிக்க ரூ. 39 கோடி நிதியுதவி அளிக்க ஜப்பான் முடிவு செய்துள்ளது.
இந்த நிதியுதவி யுனிசெப் மூலம் இந்தியாவுக்கு வழங்கப்படும். இதுதொடர்பான ஒப்பந்தம் இந்தியாவுக்கான ஜப்பான் அதிகாரி நொபுவாகி இடோ, யுனிசெப்பிரதிநிதி ஆலன் கோர்ட் ஆகியோருக்கு இடையே டெல்லியிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் கையெழுத்தானது.
தடுப்பு மருந்துகள், போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் திட்டத்திற்கான பிற செலவுகள், இந்த நிதியுதவி மூலம் ஈடுகட்டப்படும்.2000-மாவது ஆண்டில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு 88.2 மில்லியன் போலியோ சொட்டு மருந்துகளை யுனிசெப் வழங்கும். வட கிழக்கு இந்தியாவில் 1.65 கோடிகுழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், கிழக்கு பீகார்,மணிப்பூர், மிஸோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இத்திட்டம் நிறைவேற்றப்படும்.
1996-ம் ஆண்டு முதல் இந்தியாவில் போலியோ ஒழிப்புத் திட்டத்திற்கு ஜப்பான் உதவி வருகிறது. தற்போதைய உதவியின் மூலம் இதுவரைஇத்திட்டத்திற்காக ஜப்பான் ரூ. 83 கோடி கொடுத்துள்ளது.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications