செயலை விட அதன் பயனை நேசித்தால்!
புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துங்கள் - ஏற்றுமதியாளர்களுக்கு மாறன் கோரிக்கை
டெல்லி:
ஏற்றுமதித் துறையில் உலக நாடுகளின் போட்டியைச் சமாளிக்க புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உற்பத்தியை அதிகரிக்கும்படிபொறியியல் துறை ஏற்றுமதியாளர்களை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லியில் புதன்கிழமை நடைபெற்ற பொறியியல் துறை ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சிலின் அகில இந்திய விருது வழங்கும் விழாவில்அவர் பேசியதாவது:
ஏற்றுமதித் துறையில் பிற உலக நாடுகளுடன் போட்டியிடும் நிலைக்கு இந்தியா உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் பொறியியல்துறைப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு உதவிகளை மத்திய அரசு செய்துள்ளது. புதியதிட்டங்கள், அதிக நிதி ஒதுக்கீடு என பல்வேறு வகைகளில் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு உதவி செய்து வருகிறது.
ஆகவே, பொறியியல் துறைப் பொருட்கள் ஏற்றுமதியாளர்களும், உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில் புதியதொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதுடன், உற்பத்தியையும் அதிகரிக்கவேண்டும். அப்போதுதான் இந்தியாவும் பிற நாடுகளுடன்போட்டியிடும் நிலைக்கு உயர்ந்து, சிறந்த நாடாக விளங்கமுடியும்.
பொறியியல் துறையின் வளர்ச்சிக்கு புதிய எளிமையான பொருளாதாரக் கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது. 2000-2001-ம்ஆண்டுக்கான நிதி ஆண்டில் ரூ.23,650 கோடிக்கு ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகளில் மத்திய அரசுஈடுபட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 18 சதவீதம் அதிகமாகும்.
ஏற்றுமதி அளவை அதிகரிக்கும் அதே நேரத்தில் ஏற்றுமதியாளர்கள் தாங்கள் தற்போது பயன்படுத்தி வரும் தொழில்நுட்பங்களைபுதியவற்றுக்கு மாற்றிக் கொள்ளவேண்டும். ஏற்றுமதியை அதிகரிக்க தக்க புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.
ஏற்றுமதியைக் கருத்தில் கொண்டு, நாட்டில் மேலும் 10 சிறப்பு பொருளாதார வளர்ச்சி மண்டலங்கள் உருவாக்கப்படும். இவற்றில்100 சதவீத நேரடி வெளிநாட்டு முதலீடு இருக்கும் என்றார் முரசொலி மாறன்.
யு.என்.ஐ.
-
80 பிளஸ் ஏஐ டூல்ஸ்.. நீங்கள் ஒரு மாதத்தில் செய்யும் வேலைகளை.. சில நிமிடங்களில் செய்யும் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications