தமிழகத்தில் இன்று
"எம்.பியாக இருக்கும் முதல்வர்கள் நாடாளுமன்றத்திற்கு வரக் கூடாது
ஹைதராபாத்:
எம்.பி.யாக இருப்பவர், ஒரு மாநிலத்தின் முதல்வராகவோ, அமைச்சராகவோ நியமிக்கப்பட்டால் அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கக்கூடாது என்று சபாநாயகர்கள் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.
ஹைதராபாத்தில் கடந்த மூன்று நாட்களாக 63-வது சபாநாயகர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கிவைத்தார். இதில் லோக்சபா சபாநாயகர், துணை சபாநாயகர், மாநில சட்டசபை சபாநாயகர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், நம் நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. அடுத்தடுத்த தேர்தல்களில் நாட்டில்உள்ள கட்சிகள் வேறு வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கும் காலகட்டம் இது.
நாட்டின் ஸ்திரத்தன்மையை கூட்டணி ஆட்சியால் மட்டுமே தர முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. ஆளுங்கட்சி கூட்டணி, எதிர்க்கட்சி கூட்டணி என்றஇரண்டு முனை கூட்டணி மட்டுமே நிலையாக இருக்க முடியும் என்ற நிலை உள்ளது. கூட்டணி ஆட்சியில் உள்ளவர்கள் கட்சியிலிருந்து பிரிந்தால் அந்த ஆட்சியும்கவிழ்ந்து விடும் அபாயம் உள்ளது என்றார்.
மாநாடு முடிந்தவுடன் சபாநாயகர் பாலயோகி நிருபர்களிடம் பேசுகையில்,
சபாநாயகர்களின் பாரபட்சமற்ற நடவடிக்கைக்கு அடிகோலும் வகையிலும், அவர்களுக்கென்று நெறிமுறைகளை உருவாக்கும் வகையிலும் கமிட்டி ஒன்றுஅமைக்க முடிவு செய்யப்பட்டது.
எம்.பியாக உள்ள ஒருவர் மாநிலத்தின் முதலமைச்சராகவோ, அமைச்சராகவோ நியமிக்கப்பட்டால் அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கக்கூடாது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. அதே நேரம் மாநில சபாநாயகர்கள், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசியல் நடவடிக்கைகளில்ஈடுபடலாம்.
மக்கள் பிரதிநிதிகள் சபை, நீதித்துறை, மற்றும் நிர்வாகத்துறை ஆகியவை நம்நாட்டின் தூண்களாக உள்ளன. இவை மூன்றும் சுதந்திரமாகவும்,முரண்பாடின்றியும் செயல்பட வேண்டும் என்றும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
முன்பு ஒருமுறை ஒரிசா முதல்வர் கிரிதர் கோமாங்கே முதல்வராக இருந்து கொண்டே லோக்சபாவில் ஓட்டுப் போட்டதால் அப்போதைய வாஜ்பாய் ஆட்சிகவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications