“டைமை வேஸ்ட் பண்ணாதீங்க!” மாணவர்கள் மீது தடியடி.. அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறி.. அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

போலீஸ் மற்றும் துணை ராணுவ படையினர் நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட இளைஞர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர். இளைஞர்களுக்கு எதிராக பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

Supreme Court

இன்றும் போராட்டம் நீடித்து வரும் நிலையில், தடியடி, மாணவர்கள் மீதான அடக்குமுறை குறித்து அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் கேட்டிருந்தார். போலீசாரின் தாக்குதல் தொடர்பான வீடியோக்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முயன்றார். ஆனால், "எங்கள் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம். எங்களுக்கு இந்த வீடியோக்களை பார்ப்பதில் இன்ட்ரஸ்ட் இல்லை. அதற்கான நேரமும் இல்லை" என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் மிஸ்ரா கூறிவிட்டார்.

கரப்பான் பூச்சி கட்சி

டெல்லியில் தற்போது கரப்பான் ஜனதாக கட்சி என்கிற அமைப்பின் தலைமையில்தான் போராட்டங்கள் நடந்துக்கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு அமைப்பு உருவாக காரணமே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தான். போராடும் சிலர் கரப்பான் பூச்சிகள் என்று அவர் விமர்சித்திருந்தார். இந்த விமர்சனத்தை மையப்படுத்தியே கரப்பான் ஜனதா கட்சி என்கிற அமைப்பு உருவாகியிருந்தது. இப்படி இருக்கையில், இந்த அமைப்பின் சார்பில் போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது கவனம் பெற்றிருந்தது.

இந்த மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என்று உச்நீதிமன்றம் கூறியிருந்தது பல்வேறு தரப்பினரிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னதாக நேற்று, மாணவர்களுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பிரதமரின் வீட்டிற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதில் அவரும், அவரது சகோதாரரி பிரியங்கா காந்தி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸார் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+