அழகிரி மகளுக்கு டாட்டா காட்டிய தவெக.. கயல்விழி டிமாண்ட்.. கோர்த்துவிட்ட சிடிஆர் நிர்மல்குமார்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மு.க.அழகிரி மகள் கயல்விழி முன் வைத்தார். இருப்பினும் திமுக தலைமை கயல்விழியை கண்டுகொள்ளவில்லை. இதனிடையே அழகிரியின் ஆதரவாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிமுக மற்றும் தவெக பக்கம் நகர்ந்தனர். குறிப்பாக மதுரை கிழக்கு தொகுதி வென்ற கார்த்திகேயன் அழகிரியின் ஆதரவாளராக இருந்தவர் தான்.

இதனால் அழகிரியின் மகள் கயல்விழியும் தவெக பக்கம் சாயும் முடிவுக்கு வந்தார். அதற்கேற்ப முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற கயல்விழி, தலைமைச் செயலகம் சென்று அமைச்சர்களுடனும் ஆலோசனை செய்தார். இதனால் கயல்விழி விரைவில் தவெகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தவெகவில் இணைவதற்கு முன் கயல்விழி ஒரு மிகப்பெரிய டிமாண்ட் வைத்தார்.

TVK

அதாவது தவெகவில் இணையும் பட்சத்தில், தனக்கு மதுரை மாநகராட்சியின் மேயர் பதவி அளிக்கப்பட வேண்டும் என்று கோரினார். இது தவெக தலைமையை அதிர்ச்சியாக்கியது. திமுக குடும்பத்தின் முக்கிய வாரிசு தவெகவில் இணைந்தால், அது விஜய் இமேஜிற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்றே கயல்விழியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால் கயல்விழி இப்படியொரு டிமாண்டை வைப்பார் என்று தவெக தலைமையில் யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த விவகாரம் விஜய் காதுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால் விஜய் நேரடியாகவே எந்த உத்தரவாதம் கொடுத்தும் யாரையும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கூறிவிட்டதாக தெரிகிறது. விஜய் தரப்பில் தனக்காக நீண்ட காலம் உழைத்தவர்களுக்கே பதவி என்று தெளிவாக கூறப்பட்டுவிட்டது.

இதனால் கயல்விழியுடன் பேச்சுவார்த்தை நடத்திய தவெக நிர்வாகி ஆப்செண்ட்டாக, அழகிரி தரப்பு அப்செட்டாகி இருக்கிறது. இதனிடையே மதுரையில் புதிய பவர் செண்டராக தாமே இருக்க வேண்டும் என்பதில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெளிவாக இருக்கிறார். இதனால் திருப்பரங்குன்றம் தொகுதி மாவட்டச் செயலாளர் மருது பாண்டியனை மேயராக கொண்டு வர தீவிரமாக இருக்கிறார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் முதலில் மருதுபாண்டியன் தான் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் சிடிஆர் நிர்மல்குமார் கேட்டு கொண்டதால், மருது பாண்டியன் சீட் கூட கேட்காமல், அவருக்காக பணியாற்றினார். அதற்கேற்ப அமைச்சரான பின்னரும் சிடிஆர் நிர்மல்குமாருக்கு விசுவாசமாக இருக்கிறார். மதுரையில் உள்ள தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மருதுபாண்டியன் மட்டுமே அரசியல் அதிகாரம் இல்லாமல் உள்ளார்.

இதனால் கயல்விழிக்கு பதிலாக மருதுபாண்டியனை முன்னிறுத்த சிடிஆர் நிர்மல்குமார் தரப்பு தீவிரமாக இருக்கிறது. இதன் மூலமாக மதுரை மாநகராட்சியையும் தம்மால் கட்டுப்படுத்த முடியும் என்று சிடிஆர் நிர்மல்குமார் நம்புகிறார். இதனால் கயல்விழி முன் வைத்த டிமாண்ட்டே அவருக்கு எதிராக திரும்பிவிட்டதாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+