சிட்னி ஒலிம்பிக்: கோலாகலமாய் ந-டத்-த ஏற்பாடுகள் தீவி-ரம்

Subscribe to Oneindia Tamil

சிட்னி:

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்க உள்ள 2000-மாவது ஆண்டு ஒலிம்பிக்போட்டியின் நிறைவு விழாவுக்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை நடந்த ஒலிம்பி போட்டிகளின் நிறைவு விழாக்களை விட இந்த ஆண்டு சிறப்பான வகையில் மிகவும்கோலாகலமாக நிறைவு விழா நடத்தப்படவுள்ளது.

செப்டம்பர் 15-ம் தேதி துவங்கும் ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 45 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவீரர், வீராங்கனைகள் பங்கு கொள்கின்றனர். இதன் நிறைவு விழா அக்டோபர் 2-ம் தேதி நடைபெறுகிறது.

நிறைவு விழா சுமார் 5 மணி நேரம் நடத்தப்படவுள்ளது. இந்த விழாவில் சுமார் 7000 பேர் பங்கு கொள்கின்றனர்.அவர்களுக்குத் தற்போது சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நிறைவு விழா மிகவும் வண்ணமயமாகஇருக்கும் வகையில் சுமார் 1 லட்சம் மீட்டர் துணி வாங்கப்பட்டு அதில் பல வண்ணங்களில் ஓவியங்கள்தீட்டப்பட்டுள்ளன. மேலும், நடனக் கலைஞர்களுக்கான வண்ண உடைகளும் தைக்கப்பட்டுள்ளன. சுமார் 30ஆயிரம் லிட்டர் வண்ண பெயின்டுகள் வாங்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய வரலாற்றை நினைவுகூறும் வகையில் நடனக் காட்டிகள் நடத்தப்படும் என்றார் சிட்னி ஒலிம்பிக்போட்டி கலை நிகழ்ச்சிகளின் இயக்குநர் ரிச் பிர்ச் தெரிவித்தார். நிறைவு விழாவுக்கு உலகின் சிறந்த தலைவர்களைஅழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்களது பெயரை வெளியிட ரிச் பிர்ச் மறுத்துவிட்டார்.

ஒலிம்பிக் போட்டியின் கடைசி விளையாட்டாக ஆண்கள் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றிபெறுபவருக்கு பதக்கம் அளிக்கும் நிகழ்ச்சியுடன் நிறைவு விழா தொடங்குகிறது. நிறைவு விழா சிட்னி ஹோம்புஷ்பேயில் கட்டப்பட்டுள்ள ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் சுமார் 1.10 லட்சம் பேர்அமர்ந்து நிகழ்சிகளைக் காண வசதி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+