தமிழகத்தில் இன்று
10 ஆண்டுக்குள் வறுமையை ஒழிப்போம் - நிதி அமைச்சர் சின்ஹா
டெல்லி:
இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் வறுமையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாதெரிவித்தார்.
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பொருளாதாரத் துறையில் உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில் இந்தியாவின் பொருளாரத்தை மேம்படுத்து புதிய பொருளாதாரக் கொள்கைகளைமத்திய அரசு அறிவித்து அவற்றைச் செயல்படுத்தி வருகிறது.
அரசியல் ஒருமித்த கருத்து எட்டப்பட்டால்தான், பொருளாதாரக் கொள்கைகளால் முழுமையான பயன் கிடைக்கும். அது அவ்வளவு எளிதானவிஷயமில்லை. பொருளாதாரக் கொள்கைகளை முழு வீச்சில் தீவிரமாக செயல்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. ஆனால், அதற்கு அரசியல் கட்சிகளும்,அனைத்துத் தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டவேண்டும்.
பொருளாதாரக் கொள்கைகள் குறித்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது என்பது மிகவும் கடினமான காரியம். இருப்பினும், நாட்டின் பொருளாதாரமுன்னேற்றத்துக்கு அதைச் செய்து முடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
கடந்த ஆண்டு முழுமையான பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக இருந்தது. அடுத்த ஆண்டுக்குள் இதை 8 சதவீதமாக அதிகரிக்க தக்க நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நாட்டில் வறுமையை முழுமையாக ஒழிக்கவும் முயற்சிகள்எடுக்கப்பட்டுள்ளன.
சமூக நீதி இல்லாத பொருளாதார வளர்ச்சி மனிதாபிமானம் இல்லாத செயலாகிவிடும். ஆனால், பொருளாதார வளர்ச்சி இல்லாத சமூக நீதியைஏற்படுத்துவது என்பது முடியாத விஷயம்.
ஏற்றுமதி, இறக்குமதியைப் பொறுத்தவரை அதன் சதவீதம் நாட்டின் மொத்த உற்பத்தியில் 10 சதவீதமாக உள்ளது. அடுத்த 10 ஆண்டில் இதன் சதவீதம்இரு மடங்காக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றார் சின்ஹா.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications