தமிழகத்தில் இன்று
த-மி-ழ-கத்-தில் அதி-க-ரித்-து வ-ரும் குழந்தைத் தொழிலாளர்கள்
திருப்பூர்:
குழந்தைத் தொழிலாளர்கள் சமுதயாத்தின் மிகப்பெரிய கொடுமையான விஷயம். தமிழகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர்கள் பெருகுவதைக் குறைக்கவேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரஹ்மான்கான் கூறினார்.
திருப்பூரில் தென்னிந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களைக் குறைக்கும் வகையில் சர்வதேச தொழிலாளர்கள் நல அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில்கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவது அவலத்திற்குரியது. இதைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசுமுன்வரும். மேலும் பெற்றோர்கள் பணம் சம்பாதிப்பதற்காக தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகிறார்கள்.
இதனால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகிறது. இதுவே குழந்தைத் தொழிலாளர்கள் பெருகுவதற்குக் காரணம். பெற்றோர்கள்போதிய அளவு கல்வியறிவு பெறாமல் இருப்பதுதான் இதற்கு முதன்மையான காரணம்.
அரசிடம் அனுமதி பெறாமலோ, பதிவு செய்யாமலோ தொழிற்சாலைகள் நடத்திக் கொண்டு குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக்கொண்டிருக்கும் தொழிற்சாலைகளை முதலில் அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும். பின்னர் அவர்கள் குழந்தைத் தொழிலாளர்கள் வேலைக்கு வைத்திருப்பதைதடை செய்ய வேண்டும்.
குழந்தைத் தொழிலாளர்கள் நலச் சட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்லும் சிறுவர், சிறுமியரை அங்கிருந்து நீக்க வேண்டும் என்றார்.
திருப்பூர் மாவட்டக் கலெக்டர் ஜி.சந்தானம் கூறுகையில், திருப்பூர், அவினாசி, பல்லாடம் போன்ற இடங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிக அளவில்இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சராசரியாய் 15 மாணவர்கள் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் போதே அங்கிருந்து நீக்கப்பட்டு வேலைக்கு அனுப்பப்பட்டுவிடுகிறார்கள்.
33 சதவீதம் பேர் நடுநிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது இடையில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்.
இதைத் தடுத்து நிறுத்துவதற்காக இந்த வருடம் 5 முதல் 7 வயதிற்குட்பட்ட 5000 சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லும் வகையில் அவர்களை வேலைக்குப்போகாமல் பார்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் 8 முதல் 12 வயதிற்குட்பட்ட 2000 சிறுவர்களை பள்ளிக்கூடத்திற்குஅனுப்புவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவர்கள் இந்த வருடம் முதல் வேலைக்குச் செல்லாமல் பள்ளிகளுக்குச் செல்லுவதற்கு அரசு உதவியும், ஊக்கமும் அளிக்கும்.
தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பி பணம்சம்பாதிக்கும் 1200 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கோடை விடுமுறையின் போது விழிப்புணர்வுமுகாம்கள் நடத்தவும் அரசு தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications