தமிழகத்தில் இன்று
திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் ஜெ. நான்கு நாள் சுற்றுப் பயணம்
சென்னை:
திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் 4 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக, அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் ஜூன் 11 முதல் 14-ம் தேதி வரை ஜெயலலிதா சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
தஞ்சாவூரில் சசிகலாவின் அண்ணன் மகள் திருமணத்தை 11-ம் தேதி நடத்தி வைக்கிறார். ஒரத்தநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நிறுவியுள்ளபெரியார் கம்ப்யூட்டர் கல்லூரியை 12-ம் தேதி திறந்து வைக்கிறார்.
திருச்சியில் 13-ம் தேதி நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 4 ஆயிரம் பேர் அதிமுகவில்இணையும் நிகழ்ச்சி நீடாமங்கலத்தில் 14-ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.












Click it and Unblock the Notifications