தமிழகத்தில் இன்று
மனநோயாளியால் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 29 -கு-ழந்-தை-கள் மீட்பு
வேஸ்ஸர் பில்க்:
ஜெர்மனியில் 29 குழந்தைகளையும், 3 ஆசிரியர்களையும் பிடித்து வைத்திருந்த மனநோயாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தி அவரிடமிருந்துபிணைக்கைதிகள் அனைவரையும் மீட்டனர்.
ஜெர்மனியில் வேஸ்ஸர் பில்க் பகுதியில் இயங்கி வரும் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் மனநோயாளி ஒருவர் 29குழந்தைகளையும், 3 ஆசிரியர்களையும்பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தார்.
போலீசார் எவ்வளவு முயன்றும் அவர் பிணைக்கைதிகளை விடுவிக்கவில்லை. இறுதியில் 7 குழந்தைகளை விடுவித்து தனக்கு ஒரு விமானத்தையும், பஸ்சையும்தந்தால் அனைவரையும் விடுவிப்பதாக நிபந்தனை போட்டார்.
தனக்குக் கொடுக்கும் விமானத்தில் தான் லிபியா செல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அனைவரையும், அந்த மனநோயாளியிடமிருந்து உயிருடன் மீட்கத் திட்டமிட்டனர்.
இறுதியில் போலீசார் அவர் குழந்தைகளையும், ஆசிரியரையும் அடைத்து வைத்திருந்த பகுதிக்குச் சென்று துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். அத்துப்பாக்கிச்சூட்டில் அவன் காயமடைந்து கீழே விழுந்தார்.
பின்னர் போலீசார் மீதியுள்ள 25 பேரையும் மீட்டனர். குழந்தைகள் அனைவரும் 2 முதல் 8 வயதிற்குட்பட்டவர்கள். கடத்தி வைக்கப்பட்டிருந்தபிணைக்கைதிகளுக்கு அவர் எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை. அவர்களை துன்புறுத்தவும் இல்லை.
மீட்கப்பட்ட அனைத்து குழந்தைகளும், ஆசிரியர்களும் பத்திரமாக அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். மனநிலை பாதிக்கப்பட்டுகாப்பகத்தில் உள்ள அனைவரையும் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்த அந்த மனநோயாளிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
விடுவிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் பலூன்களை வைத்துக்கொண்டும், கரடிப்பொம்மைகளை வைத்துக் கொண்டும் கிட்டத்தட்ட 28 மணிநேரத்திற்குப்பின் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினார்கள்.
மனநோயாளியைப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications