தமிழகத்தில் இன்று
தமிழகத்தில் விரைவில் 5.5 லட்சம் தொலைபேசி இணைப்புகள்
கோவை:
தமிழகத்தில் மேலும் 5.5 லட்சம் புதிய தொலைபேசி இணைப்புகள் வழங்கப்படும். இதில் கோவை நகரில் மட்டும் 75 ஆயிரம் இணைப்புகள்வழங்கப்படவுள்ளது என தமிழ்நாடு தொலைத் தொடர்புத் துறை முதன்மை பொது மேலாளர் முகமது யாசின் தெரிவித்தார்.
கோவையில் வியாழக்கிழமை புதிய டைரக்டரி வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் புதிய டைரக்டரியை முகமது யாசின் வெளியிட, அதை கோவைமாநகர போலீஸ் துணைகமிஷனர் டேவிட்சன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் கோவை தொலைத் தொடர்புத் துறை பொது மேலாளர் ஸ்ரீதர் மற்றும் வெங்கடேசன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ராஜ்குமார், எம்.
என் பப்ளிகேஷன்ஸ் நிதிக் கட்டுப்பாட்டாளர் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு பின்னர் முகமது யாசின் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் புதிதாக 5.5 லட்சம் புதிய இணைப்புகள் விரைவில் வழங்கப்படும். இதில் கோவை மாவட்டத்திற்கு 75 ஆயிரம் இணைப்புகள் கிடைக்கும்.
தமிழகத்தில் விரைவில் செல்லுலார் போன் சர்வீஸ் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும். கோவை, சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் முதல்கட்டமாக ஆயிரம் செல்லுலார் போன் வழங்கப்படும்.
இந்த தொலைபேசி "இந்தியன் மொபைல் பெர்சனல் கம்யூனிகேஷன் சர்வீஸ் என அழைக்கப்படும். தொலைபேசித் துறையே இதற்கான கருவிகளைவழங்கும் என்று முகமது யாசின் தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications