பாகிஸ்தானிடம் பங்களாதேஷ் சரண் - அப்துர் ரஸாக் அபார பந்து வீச்சு
டாக்கா:
பங்களாதேஷுக்கு எதிரான ஆசிய கோப்பைக் கிரிக்கெட் ஆட்டத்தில் 233 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அந்தஅணியின் வேகப் பந்து வீச்சாளர் அப்துர் ரஸாக் சிறப்பாகப் பந்து வீசி 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றிக்கு வழி வகுத்தார்.
டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்தது. இம்ரான்நசீர் 80 ரன்களும், யூசுப் யுகானா 80 ரன்களும், இன்சமாம் 75 ரன்களும், அபிரிதி 45 ரன்களும், அன்வர் 31 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய பங்களாதேஷ், பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் திரும்பினர். பஷீர் 23 ரன்களும்,ரெஹ்மான் 11 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில்தான் ரன்கள் எடுத்தனர். உபரியாக 22 ரன்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதியில் பாகிஸ்தானுக்கு எந்த வித எதிர்ப்பையும் காட்டாமல் 34.2 ஓவரில் 87 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பங்களாதேஷ்தோல்வியடைந்தது. இதன் மூலம் 233 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றியைப் பாகிஸ்தான் பெற்றது.
பாகிஸ்தான் அணியில் அப்துர் ரஸாக் தனது பந்துவீச்சால், 4 ஓவர்களில் 5 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அசார் மெஹ்மூத் 2விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இப் போட்டியில் வென்றால்தான் இறுதிப் போட்டிக்குள் நுழையமுடியும் என்ற நிலையில், இந்தியா இந்த ஆட்டத்தில் விளையாடுகிறது.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளை வென்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி பெற்றுவிட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications