தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

இந்திய-சீன நல்லுறவுக்கான தடைகளை விலக்க அமைச்சர் கோரிக்கை

டெல்லி:

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே அரசியல் மற்றும் பொருளாதார நல்லுறவு மேலும் வலுப்பட இரு நாடுகளுக்கும் இடையே உள்ளஉள்கட்டமைப்புத் தடைகளை நீக்கவேண்டும் என்று மத்திய பெரிய தொழிற்சாலைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் மனோகர்ஜோஷி தெரிவித்தார்.

சீனாவிலிருந்து வந்துள்ள தொழிலதிபர்கள், வர்த்தக அதிகாரிகள், தனியார் தொழில் முதலீட்டாளர்கள் அடங்கிய குழுவினரிடம் அவர் கூறியதாவது:

இந்தியா பொருளாதாரத் துறையில் முன்னேறி வருகிறது. தற்போது இரண்டாவது தலைமுறை சீர்த்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.வேகமான உள்கட்டமைப்பு வளர்ச்சி, பொருளாதாரத் துறையில் உள்ள விதிமுறைகளை எளிதாக்குவது, நேரடி அன்னிய முதலீட்டை வரவேற்பது உள்ளிட்டபல்வேறு நிலைகளில் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சீனாவிடமும், இந்தியாவிடமும் அனைத்து விதமான வளங்கள் ஏராளமாக உள்ளன. மேலும் தொழில்நுட்பத் துறையில் இரு நாடுகளும் சிறந்துவிளங்குகின்றன மனித வளமும் நிறைய உள்ளது. ஆகவே, எதிர்காலத்தில் இரு நாடுகளும் அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் இணைந்துசெயல்பட இரு நாடுகளுக்கும் இடையே உள்ள தடைகளை விலக்க வேண்டும் என்றார் ஜோஷி.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+