தமிழகத்தில் இன்று
மூப்பனார் வந்தார்..ராமதாஸ் வரவில்லை..
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியை, சனிக்கிழமை அவரது இல்லத்தில் சந்தித்துப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தார்.
திராவிட இயக்க மூத்த தலைவரான முதல்வர் கருணாநிதியின் 77-வது பிறந்த நாள் விழாவை திமுக மூன்று நாள் விழாவாகக் கொண்டாடுகிறது.வெள்ளிக்கிழமை துவங்கிய பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளின் உச்சகட்டமாக சனிக்கிழமை காலை கட்சித் தொண்டர்கள் மத்தியில் முதல்வர் கருணாநிதிதனது பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்.
முதல்வரை வாழ்த்த பல்வேறு கட்சித் தலைவர்கள் வந்தனர். திமுக அணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, பா.ஜ.க, எம்.ஜி.ஆர். கழகம்,எம்.ஜி.ஆர்.அதிமுக, ராஜீவ் காங்கிரஸ் போன்ற கட்சித் தலைவர்கள் அனைவரும் நேரில் வந்து பொன்னாடை போர்த்தி முதல்வருக்கு வாழ்த்துத்தெரிவித்தனர்.
அதிமுக அணியில் இடம் பெற்றிருந்தாலும் கூட, தேசிய லீக் தலைவர் அப்துல் லத்தீப், காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் ஆகியோரும் முதல்வருக்கு நேரில்வந்து வாழ்த்துத் தெரிவித்தனர். ஆனால் திமுக அணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க. சார்பில் யாரும் நேரில் வரவில்லை.
பா.ம.க தலைவர் ராமதாஸ் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தார். அவரது கட்சியின் சார்பில் எந்தப் பிரமுகரும் நேரில் வந்து முதல்வருக்கு வாழ்த்துக்கூறவில்லை. சனிக்கிழமை காலை சென்னை வந்த பா.ம.கவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்னுச்சாமி கூட முதல்வருக்கு வாழ்த்துச் சொல்லவரவில்லை.
ஆனால், தமாகா தலைவர் மூப்பனார், முதல்வருக்கு வாழ்த்துச் சொல்ல வருவாரா, மாட்டாரா என்ற கேள்வி எழுந்தது. பகல் ஒருமணி வரையில்அவர் அறிவாலயம் வரவில்லை. ஆனால் மாலையில் ஆலிவர் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்குச் சென்று பொன்னாடை அணிவித்து முதல்வருக்குவாழ்த்துச் சொன்னார் மூப்பனார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications