தமிழகத்தில் இன்று
ஜூ-ன்03, 2000
பாஞ்சாலி சபதம்
(தொடர்ச்சி)
2. சரஸ்வதி வணக்கம்
வெள்ளைக் கமலத்திலே - அவள்
வீற்றிருப்பாள், புக ழேற்றிருப்பாள்,
கொள்ளைக் கனியிசை தான் -நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப்பாள் ,
கள்ளைக் கடலமு தை - நிகர்
கண்டதோர் பூந்தமிழ்க் கவிசொல வே
பிள்ளைப் பருவத்திலே - எனைப்
பேணவந் தாளருள் பூணவந்தாள் (3)
வேதத் திருவிழியான் - அதில்
மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள்,
சீதக் கதிர்மதியே - நுதல்
சிந்தனையே குழ லென்றுடை யாள்,
வாதத் தருக்க மெனுஞ் - செவி
வாய்ந்ததற் றுணி வெனுந் தோடணிந்தாள்,
போதமென் நாசியி னாள் - நலம்
பொங்கு பல்சாத்திர வாயுடையாள் (4)
கற்பனைத் தேனிதழாள் - சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையி னாள்
சிற்ப முதற்கலை கள் - பல
தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப் பாள்
சொற்படு நயமறி வார் - இசை
தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறி வார்
விற்பனைத் தமிழ்ப்புல வோர் - அந்த
மேலவர் நாவெனும் மலர்ப்பதத் தாள் (5)
வாணியைச் சரண்புகுந்தேன் - அருள்
வாக்களிப் பாளெனத் திடமிகுந்தேன்
பேணிய பெருந்தவத் தாள் - நிலம்
பெயரள வும்பெயர் பெயரா தாள்
பூணியல் மார்பகத் தாள் - ஐவர்
பூவை, திரெளபதி புகழ்க் கதையை
மாணியல் தமிழ்ப்பாட்டால் - நான்
வகுத்திடக் கலைமகள் வாழ்த்துக வே! (6)
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications