கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
மதிமுகவின் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரணி ஒத்திவைப்பு
சென்னை:
முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து சென்னையில் 5-ம் தேதிமதிமுக சார்பில் நடைபெற விருந்த இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரணிஒத்திவைக்கப்படுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் 5ம் தேதி ஈழத் தமிழர் பாதுகாப்புப்பேரணி நடத்த மதிமுக திட்டமிட்டிருந்தது. இப்பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என்றுதமாகா வலியுறுத்தியது.
இலங்கைத் தமிழர் பிரச்சனை என்ற பெயரில் இந்தியாவில் நடை பெறும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக மதிமுக செயல்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்துஅனுமதிக்கக்கூடாது என்று மத்திய மாநில அரசுகளுக்கு தமாகா வேண்டுகோள் லிடுத்தது.
இதே போன்ற எதிர்ப்பு காங்கிரஸ், ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகளிடமிருந்தும்கிளம்பியது. இதையடுத்து இப் பேரணிக்கு தமிழக அரசு அனுமதியளிக்குமா என்றகேள்விக் குறி எழுந்தது.
இந் நிலையில் வெள்ளிக்கிழமை கோட்டையில் கருணாநிதியை சந்தித்த செய்தியாளர்கள்,இப் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினார். மதிமுக பேரணிக்குத் தடை விதிக்கவேண்டும் என்று எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இப் பேரணியை அரசுஅனுமதிககுமா அல்லது தடைவிதிக்குமா என்று கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த முதல்வர் ஒரு விஷயம் பிரச்சனைக்குரியதாக ஆக்கப்படுகிறபோதுஅதை தவிர்த்து விடுவதுதான் நல்லது. இதை எனது பிறந்த நாள் செய்தியாக எடுத்துக்கொள்ளலாம் என்று வைகோவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதை ஏற்று தமது கட்சியின் பேரணியை ஒத்தி வைத்துள்ளதாக, முதல்வரின் பிறந்த நாள்விழாவில் பங்கேற்ற போது வைகோ தெரிவித்தார்.
முதல்வர் கருணாநிதியின் 77வது பிறந்த நாள் விழா சனிக்கிழமை திமுக தலைமைஅலுவஸகமான அண்ணா அறிவாலயத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில்முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமது கட்சியின்மத்திய அமைச்சர்கள் கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன், ஆகியோருடன் வந்தார்.
அண்ணனுக்கு தம்பி தெரிவிக்கும் பாசம் நிறைந்த வாழ்த்துக்கள் என்று முதல்வர்கருணாநிதிக்கு பொன்னாடை அணிவித்து பூச்செண்டு கொடுத்து வாழ்த்தினார் வைகோ.
பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேரணி ஒத்திவைப்பு அறிவிப்பைவெளியிட்டார். அந்த அறிவிப்பில் வைகோ கூறியதாவது:
சிங்கள அரசின் இனப் படுகொலைக்கு ஆளாகி எண்ணற்றத் துன்பங்களால்பாதிகக்ப்படடு, போராடும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு குரல் எழுப்பவும், இந்தபிரச்சனையில் ஈழத் தமிழர் நலனுக்கு எந்த விதத்திலும் குந்தகம் ஏற்படாத வகையில்வாஜ்பாய் அரசு கடைபிடிக்கும் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தும் 5ம் தேதி சென்னையில்பேரணி நடத்த மதிமுக முடிவு செய்திருந்தது.
தற்போது இப்பிரச்சனையில் முதல்வர் தனது பிறந்தநாள் செய்தியாக தெரிவித்த கருத்துக்குமதிப்பளித்து பேரணியை மதிமுக ஒத்தி வைக்கிறது. ஈழத் தமிழர் பிரச்சனையில்மதிமுகவின் நிலைப்பாட்டிலும், அணுகுமுறையிலும் எந்த வித மாற்றமும் இல்லை.
இவ்வாறு வைகோ கூறினார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications