தமிழகத்தில் இன்று
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு
மணிலா:
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில்ஞாயிற்றுக்கிழமை காலை சக்தி மிக்க குண்டு வெடித்தது. இதனால், விமான நிலையக்கட்டடத்துக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது. மேலும், அங்கிருந்த பொதுக் கழிப்பிடம்முற்றிலும் தரைமட்டமானது.
குண்டுவெடிப்பால் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை என்று விமான நிலைய அதிகாரிகள்தெரிவித்தனர்.
விமான நிலையத்தில், பயணிகளை வரவேற்க உறவினர்கள் காத்திருக்கும் பகுதிக்குசில மீட்டர் தூரத்தில் உள்ள பெண்கள் கழிப்பிடத்துக்கு மிக அருகில் குண்டு வெடித்தது.இதனால், கழிப்பிடம் முற்றிலும் சேதமடைந்தது. குண்டு வெடிப்பால், விமானநிலையத்தில் இருந்த கண்ணாடிக் கதவுகள் சேதமடைந்தன.
உறவினரை வரவேற்கக் காத்திருந்த ஒரு பெண்ணிடம் இரு நபர்கள் வந்துதங்களிடமிருந்து இரு கார் ஸ்டீரியோக்களை வைத்துக் கொள்ளும்படி கூறினர்.ஆனால், அவற்றை வாங்கிக் கொள்ள அப் பெண் மறுத்துவிட்டார். இதையடுத்து அந்தகார் ஸ்டீரியோக்களை பெண் கழிப்பிடத்துக்கு அருகே வைத்துவிட்டு இருவரும்சென்றுவிட்டனர். அந்த கார் ஸ்டீரியோக்கள் தான் வெடித்திருக்கவேண்டும் என்றுபோலீஸார் கருதுகின்றனர்.
இது தொடர்பாக, குண்டு வெடிப்பு நடந்த சிறிது நேரத்தில் விமான நிலையத்திலிருந்துவெளியே செல்ல முயன்ற இருவரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த குண்டு வெடிப்புக்கும், முஸ்லீம் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். மணிலாவில் கடந்த ஒரு மாதத்தில் நடைபெறும்5-வது குண்டு வெடிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications