தமிழகத்தில் இன்று
ராமதாஸும், வைகோவும் அரசியல் புரட்டர்கள் - வாழப்பாடி ராமமூர்த்தி
சென்னை:
பாமக நிறுவனர் ராமதாஸும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் அரசியல் புரட்டர்கள் என்றார் தமிழகராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து கொண்டு சக கூட்டணிக் கட்சித் தலைவர்களை வசைபாடி வரும்வாழப்பாடி, தனிப்பட்ட முறையில் ராமதாஸ் மீது ஊழல் புகார்களை அள்ளி வீசினார். இப்போது, ா இலங்கைப்பிரச்சினையில் வைகோ, ராமதாஸ் இருவரையும் கடுயாைகத் தாக்கிப் பேசத் தொடங்கியுள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஒரு சில கட்சிகள் யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள்தான் தமிழர்கள் என்பதுபோல் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுகின்றன. விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் ஆதரவு திரட்ட முயல்கின்றனர். ராஜீவ்காந்தியைக் கொன்றதால், புலிகள் மீதான அனுதாபம் தமிழர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. புலிகள் மீதுவெறுப்புதான் நிலவுகிறது.
ஆனாலும், சில கட்சிகள் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க புலிகளை ஆதரிக்கின்றன. அதில் அவர்களுக்குள் கடும்போட்டியும் நிலவுகிறது. நம் நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை ஆதரிப்பதில் யார் முதலிடம் என்பதில்அவர்களுக்குள் போட்டி. ஒருவர் உண்ணாவிரதம் என்றால், மற்றொருவர் பேரணி நடத்துவோம் என்கிறார். இக்கட்சிகள் எல்லாம் தேசிய ஜனநாயகக் கட்சியில்தான் இருக்கின்றன. மத்திய அரசிலும் அங்கம் வகிக்கின்றன.
இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையே அந் நாட்டின் இறையாண்மையைக்காப்பதுதான். அதனடிப்படையில்தான் அப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்பதுதான் நமதுகொள்கை. அதற்காக தமிழர்கள் மீது அக்கறை காட்டவில்லை என்று அர்த்தமில்லை. இதுவரை இருந்த அரசுகள்அனைத்தும் தமிழர்கள் நலன் மீது அக்கறை காட்டின. அதன் காரணமாக பல ஒப்பந்தங்கள் ஏற்பட்டன.
அவற்றை இலங்கை அரசு செயல்படுத்தத் தவறியதால்தான் இப்பிரச்சினைக்குக் காரணம். பிரதமர் வாஜ்பாய் இதைஉணர்ந்துள்ளார். அதனால்தான் தமிழர்கள் மீதான எண்ணத்தை இலங்கை அரசு மாற்றிக் காள்ளவேணடும் என்றுகூறியுள்ளார்.
ஆனால், தமிழகத்தில் உள்ள வைகோவும், ராமதாஸும் இப் பிரச்சினையில் இரட்டை வேடம் போடுகின்றனர். இப்பிரச்சினை தொடர்பாக டெல்லியில் நடந்த கூட்டத்தில் மத்திய அரசின் நிலையை ஆதரிப்போம் என்று கூறிவிட்டுவந்தவர்கள், தமிழகத்தில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று பேசுகின்றனர். இதில் ராமதாஸ் ரொம்ப மோசம். 10நிமிடத்துக்கு ஒன்று சொல்கிறார். அடிக்கடி பேச்சை மாற்றி அரசியல் பித்தலாட்டம் செய்கிறார்.
மத்திய அரசில் இவர்கள் பங்கு பெற்றிருப்பதை நீடிக்க விரும்பினால் மத்திய அரசின் நிலையை ஏற்றுக்கொள்ளவேண்டும். மத்திய அரசின் நிலையை ஏற்கமாட்டோம் என்றால், மத்திய அரசிலிருந்துவெளியேறவேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அவர்கள் நீடிக்கக்கூடாது. இனிமேலும் அவர்கள் தங்களது நிலையை மாற்றிக்கொள்ளாமல் செயல்படுவார்களே ஆனால், நானே பிரதமரைச் சந்தித்து வெளியேற்றச் சொல்வேன் என்றார்வாழப்பாடி.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications