தமிழகத்தில் இன்று
அமைதிப் பேச்சுவார்த்தையை புலிகள் நிராகரித்துவிட்டனர் - அதிபர் சந்திரிகா குமாரதுங்கா
கொழும்பு:
அமைதிப் பேச்சுவார்த்தையை விடுதலைப் புலிகள் நிராகரித்து விட்டனர் என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காதெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:
இலங்கையில் 17 ஆண்டுகளாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண அரசு முயற்சித்து வருகிறது. ஆனால், பேச்சுவார்த்தையைபுலிகள் நிராகரித்து விட்டனர்.
இருப்பினும், வேறு வகையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இலங்கை அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாண தீபகற்பத்தில் நடைபெறும் போர்தான் பேச்சுவார்த்தைக்குத் தடையாக இருப்பதாக நான் நினைக்கவில்லை.புலிகள் தான் வேண்டுமென்றே பேச்சுவார்த்தைக்கு எதிராக இருக்கின்றனர்.
கடந்த 6 ஆண்டுகளாக புலிகளுடன் பேச்சு நடத்த நான் முயற்சித்தேன். ஆனால், 6 ஆண்டுகளாக அவர்களும் பேச்சுவார்த்தைக்கு வராமல்பல்வேறு பொய்க் காரணங்களைக் கூறி வருகின்றனர். இனி எதிர்காலத்தில் புலிகளுடன் பேச்சு நடந்தால் அது சிலநிபந்தனைக்குட்பட்ட பேச்சுவார்த்தையாகத் தான் இருக்கும். என்ன நிபந்தனைகள் என்பதைக் கூறமுடியாது.
குறிப்பிட்ட கால நிர்ணயித்துக்குள் புலிகளுடன் பேச்சு நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டது. புலிகளும் எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வோம் என்று அறிவித்தனர். ஆனால், அவர்கள் அவ்வாறுசெய்யாமல் பேச்சு வார்த்தையைப் புறக்கணித்தனர். இப்போது, தங்களுடைய சில நிபந்தனைகளை நிறைவேற்றினால்தான்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வோம் என்று அறிவித்துள்ளனர்.
நார்வே நாட்டு சமரசத்துடன் புலிகளுடன் பேச்சு நடத்த இலங்கை அரசு திட்டமிட்டு அதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டது. ஆனால்,அதையும் புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இலங்கை இனப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு புதிய அரசியலமைப்புச் சட்டத்தைஉருவாக்குவதுதான் ஒரே வழி என்ற கருதுகிறேன். அதற்கான நடவடிக்கையில் நான் ஈடுபட்டுள்ளேன். இதற்கு புலிகளின் சம்மதம்தெரிவித்தாலும், தெரிவிக்காவிட்டாலும் நான் தொடர்ந்து அந்த முயற்சியில் ஈடுபடுவேன்.
எனது புதிய அரசியலமைப்புத் திட்டம் குறித்து எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சு நடத்தி வருகிறேன். நாடாளுமன்றத்தேர்தல் குறிப்பட்ட நேரத்தில் நடைபெற வசதியாக ஒரு குறிப்பிட்ட கால நிர்ணயித்துக்குள் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.தேர்தல் எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்கப்படாது என்றார் சந்திரிகா குமாரதுங்கா.
அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் புதிய அறிவிப்பு பற்றி புலிகள் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை.
பிரிட்ஜ் நியூஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications