முகத்தில் தெளித்த சாரல்...
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இ.வெ.கி.ச. இளங்கோவன் நியமனம்
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக இ.வெ.கி.ச. இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான அறிவிப்பு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
தற்போது தலைவராக உள்ள திண்டிவனம் ராமமூர்த்தி அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப்பதிலாக நியமிக்கப்பட்டுள்ள இங்கோவன், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினராக இருந்துள்ளார். திராவிட இயக்கத் தலைவர் மறைந்தஈ.வெ.கி. சம்பத்தின் மகன் இவர். இவரது தாய் சுலோச்சனா சம்பத், அதிமுகவில் மகளிர் அணிச்செயலாளராக உள்ளார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அதிமுக இரண்டாகப் பிரிந்தது. ஜானகி எம்.ஜி.ஆர். தலைமையில் ஒருஅணியும், ஜெயலலிதா தலைமையில் மற்றொரு அணியும் உருவானது. சட்டப்பேரவையில் பலத்தைநிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருவரும் இருந்தனர். அப்போது யாருக்கும் ஆதரவளிப்பதில்லை என்றுகாங்கிரஸ் முடிவு செய்தது. ஆனால், ஓட்டெடுப்பின்போது ஜானகி அணிக்கு ஆதரவாக இளங்கோவன்வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸில் சிவாஜியின் ஆதரவாளராக இருந்தார் இளங்கோவன். காங்கிரஸிலிருந்து பிரிந்து தமிழ் மக்கள்முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை சிவாஜி தொடங்கியபோது அக் கட்சியில் சேர்ந்தார். பின்னர்அக் கட்சியைக் கலைத்துவிட்டு ஜனதா தளத்தில் சிவாஜி சேர்ந்தார். ஆனால், இளங்கோவன் அக்கட்சியில் சேராமல் மீண்டும் காங்கிரஸில் சேர்ந்தார்.
அங்கு வாழப்பாடி ஆதரவாளராக இருந்தார். பின்னர் வாழப்பாடி காங்கிரஸிலிருந்து பிரிந்து திவாரிகாங்கிரஸ் ஒன்றை ஆரம்பித்தார். ஆனால், அதில் சேராமல் காங்கிரஸிலேயே இளங்கோவன்இருந்துவிட்டார்.
தற்போது காங்கிரஸில் பிரபு ஆதரவாளராக இருந்த அவர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகநியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், அவரது நியமனத்தை திண்டிவனம் ராமமூர்த்தி மற்றும் முன்னாள் தலைவர் தங்கபாலு,குமரி அனந்தன் ஆகியோர் ஏற்கமாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications