தமிழகத்தில் இன்று
ஜூ-ன்05, 2000
பாஞ்சாலி சபதம்
(தொடர்ச்சி)
4. துரியோதனன் சபை
கன்னங் கரியது வாய் - அகல்
காட்சிய தாய்மிகு மாட்சிய தாய்,
துன்னற் கினியதுவாய் - நல்ல
சுவை தரும் நீருடை யமுனையெ னும்
வன்னந் திருநதி யின் - பொன்
மருங்கிடைத் திகழ்ந்த அம் மனிநக ரில்,
மன்னவர் தங்கோ மான் - புகழ்
வாளரவக் கொடி யுயர்ந்து நின்றான். (15)
துரியோ தனப் பெயரான் - நெஞ்சத்
துணிவுடையான், முடி பணிவறி வான்
கரியோ ராயிரத் தின் - வலி
காட்டிடுவான் என்றக் கவிஞர்பி ரான்
பெரி யோன் வேதமுனி -அன்று
பேசிடும் படிதிகழ் தோள்வலி யோன்,
உயியோர் தாமெனினும் - பகைத்
குரியோர் தமக்குவெந் தீயனையான். (16)
தந்தைசொல் நெறிப்படியே -இந்தத்
தடத்தோன் மன்னவன் அரசிருந்தான்.
மந்திர முணர்பெரியோர் - பலர்
வாய்த் திருந்தார் அவன் சபைதனி லே.
அந்தமில் புகழுடை யான் - அந்த
ஆரிய வீட்டுமன். அறம்அறிந் தோன்.
வந்தனை பெறுங்குர வோர் - பழ
மறைக்குள் மறவர்கள் இருவரொடெ. (17)
மெய்ந்நெ யுணர்விது ரன் - இனி
வேறுபல் அமைச்சரும் விளங்கி நின்றார்
பொய்ந்நெறித் தம்பியரும் - அந்தப்
புலைநடைச் சகுனியும் புறமிருந்தார்
மைந்நெறி வான்கொடையோன் - உயர்
மானமும் வீரமும் மதியுமு ளோன்
உய்ந்நெறி யறியான் தான் - இறைக்கு
உயிர்நிகர் கன்னனும் உடனிருந்தான். (18)
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications